பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



-252 கமலாம்பாள் சரித்திரம் போரும், மிதப்போரும், நீந்துவோருமாயிருந்த அத் தருணத்தில் கரையை நோக்கி நல்ல காற்று ஒன்று -சமய சஞ்சீவியாய் வீச நீந்தமுடியாத நிர்ப்பலர்களில் அநேகர் கரையோரம் ஒதுக்கப்பட்டனர். லட்சுமியும் சுந்தரமும் கரையோரமாயுள்ள ஓர் மணற்றிட்டில் ஒதுக்கப்பட்டார்கள். கமலாம்பாள் அவர்களுக்கரு கில் ஒரு நாணற்புதரில் அரை உயிருடன் அலங்கோல மாய்க்கிடந்தாள். இப்படி இவர்கள் கிடக்கும் போது யாரோ ஒரு கிழவர் அந்த மழையில் கையில் குடையும் ராந்தலும் கொண்டு அங்கு விழுந்திருந்த வர்களைத் தட்டி யெழுப்பி மூர்ச்சைதெளிவித்து அரு கிருந்த மடத்துக்கு அழைத்துப்போய்க்கொண்டிருந் தார். அவர் கமலாம்பாளும், லட்சுமியும், சுந்தரமும் இருந்த இடம் வந்து அவர்களைப்பார்த்துத் திடுக் -கிட்டு அருகில் உட்கார்ந்து ' ஐயோ இதென்ன ஆபத்து. இவர்கள் எங்கே யிங்கு வந்தார்கள்! அடப் பாவமே, உயிர்தான் இருக்கிறதோ இல்லையோ !' என்று கவலைப்பட்டுக் கைதட்டி சுவாசமறிந்து பார்த்து அவர்களை மெதுவாய்த் தூக்கி மண்டபத்தில் சேர்த்து மூர்ச்சை தெளிவிக்கவேண்டிய பிரயத்தனங்களைச் - செய்து கொண்டிருந்தார். ப