29 29 - அம்மையப்ப பிள்ளையின் பூர்வகதை. மூர்ச்சையாய்க் கிடந்த லட்சுமி, கமலாம்பாள், சுந்தரம் ஆகிய மூவரும் ஆற்றங்கரையினருகிலிருந்த ஓர் மண்டபத்தில் சேர்க்கப்பட்டார்கள். அங்கே அவர்களை அறிவுக்குக் கொண்டுவருவதற்கு வேண்டிய பிரயத்தனங்கள் செய்யப்பட்டன. அவ்வுபாயங் களின் உதவியால் அவர்கள் மூவரும் தங்களுடைய சுயஞாபகத்தை யடைந்தார்கள். கமலாம்பாள் திடுக் கிட்டு விழித்துப்பார்க்க வித்வான் அம்மையப்பபிள்ளை அவர்கள் அருகில் நின்றுகொண்டு இருந்தார். ஆடுசா பட்டியில் அவதரித்த அண்டர் புகழும் அஷ்டாவதா னம் மகாவித்வான் அம்மையப்பபிள்ளை அவர்களை இதைப் படிப்பவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்ளென்று நம்புகிறேன். அவர் வயதாய் விட்டபடியால் மதுரைக் காலேஜில் ' பென்ஷன் ' பெற்றுக்கொண்டு அதைவிட்டு வெளியேறி புண்ணியஸ்தலங்களில் போய் சுவாமி தரிசனம் செய்யும் பொருட்டு வடக்கே யாத் திரை போய்க்கொண்டிருந்தார். எந்த ஸ்தலத்துக்குப் போனாலும் அங்கேயே அதைப்பற்றிப் பாடாமல் விடுவதில்லை. சீர், தளை, மோனை, எதுகை முத லிய யாப்பிலக்கணத்தின் பிள்ளை குட்டி சம்சாரங் கள் சமயாறிந்து சண்டை செய்யும். செய்தாலும் அந்த முரட்டுக் கிழவர் விடுவதில்லை. அவர் சித்திரக் கவிகள் எழுதுவதில் மகா சமர்த்தர். சீர்கணக்கு, அடிக்கணக்கு, மோனை, எதுகை விதிகள் இவைகளை லட்சியம் செய்யாமலே பாடி விடுவார். இரண்டு கால் மனிதன் பிறப்பது உலகத்தில் சகஜமாயிருக்கிறது. அப்படி யில்லாமல் மூன்று கால், நாலுகை, இரண்டு