உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



-254 கமலாம்பாள் சரித்திரம் தலை இப்படி மனிதர்கள் இருந்தால் அவர்களை டி கட்டுவரி கொடுத்தல்லவோ ஜனங்கள் போய்ப் பார் கிறார்கள். அதுபோல நாலடி வெண்பாக்கள் உலகள் தில் சர்வசாமான்யம். அப்படியில்லாமல் 6- அடி வெண்பாக்கள், 7-அடி வெண்பாக்களா யிருந்தால் எவ்வளவு விசித்திரமாயிருக்கும். அவைகளை அட மையப்பபிள்ளையவர்களைத் தவிர வேறு யார் தான் பாடக்கூடும். இவ்வித விசித்திரக் கவிகளை ஸ்தலங் கள் தோறும் கூசாமல் வாரியிறைத்து பாடல் பெறாத் ஆலயங்களைக் கூடப் பாடல் பெறச்செய்து யாத்திரை செய்து கொண்டிருந்தார். பாலம் உடைந்து ரயிலில் ஆபத்து நேரிட்ட அன்று அவர் அந்தப் பாலத்துக்கு அடுத்த ஓர் கிராமத்தில் இருந்துகொண்டிருந்தார் இவ்வித விபத்து நேரிட்டதென்று தெரிந்த உட னேயே புண்ணியம் சேகரிப்பதில் வெகு குறிப்பா யிருந்த அவர் ராந்தலும் குடையும் எடுத்துக்கொண்டு மற்றுஞ் சிலருடன் நதியில் அகப்பட்டுக் கொண்ட ஜனங்களை ரட்சிப்பதற்காக ஓடிவந்தார். வந்தவர் கமலாம்பாள் லட்சுமியிவர்களைக்கண்டு, அட்டா, இவர் களெங்கே யிங்குவந்தார்களென்று ஆச்சரியப்பட்டு அவர்களை மண்டபத்தில் சேர்த்துக் கொண்டிருந்தார். அம்மையப்பபிள்ளை முத்துஸ்வாமியய்யரால் ஆத ரிக்கப்பட்டவரென்று மாத்திரம் சொன்னோமே யல்லாது அவர்களிருவருக்கும் உள்ள உறவை நாம் முன்னே சொல்லவில்லை. மேல் நடக்கவேண்டிய விர்த்தாந்தங்களுக்கு அது தெரிய வேண்டியதவசியமா யிருப்பதால் அதைப்பற்றிச் சுருக்கமாகச் சொல் வோம். முத்துஸ்வாமியய்யருடைய தகப்பனார் ரங்கசாமி யய்யர் என்று ஒருவர் இருந்தார். அவர் மகா கோலா கல புருஷர். அனுபவிப்பதற்காகவே அவதரித்த