உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



256 கமலாம்பாள் சரித்திரம் லிக்கொண்டு திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்திருந் தார். அது குளிர்காலம். காற்று அவருடைய தரித்திரத் தைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாது அவர்மேல் ஜில்லென்று அடித்தது. அவர் உடுத்தியிருந்த கந்தல் கள் அவரைக் காப்பாற்றப் போதாதனவாயிருந்தன. குளிருக்குப் பயந்து அவர் திண்ணையை விட்டிறங்கி அந்த வீட்டு ரேழிக்குள் சென்றார். பாட்டு மயக்கத் தில் அது அன்னியருடைய வீடென்பது அவருக்கு மறந்துபோய்விட்டது. அங்கே போனபிறகு யாரா வது பார்க்கக்கூடுமென்று பயந்து அருகிலிருந்த ஒரு குடுவையிடுக்கில் நுழைந்து கொட்டுக்கொட்டென்று கண்ணை விழித்துக்கொண்டு பதுங்கி உட்கார்ந்திருந் தார். இப்படி இருக்கிறபோதே ரங்கசாமியய்யர் 'திடீரென்று எழுந்து தற்செயலாய் வாசலை நோக்கி வர அம்மையப்பபிள்ளை பதுங்கிக்கொண்டிருந்ததைக் கண்டுவிட்டார். ஊரில் அப்பொழுது கள்ளர் பயம் அதிகம். தெற்குச் சீமையிலிருந்து சில கள்ளர்கள் நூதனமாக வந்திருப்பதாக அன்றுதான் பிரஸ்தாபம். ரங்கசாமியய்யர் அவரைக் கண்ட வுடன் 'கள்ளன், கள்ளன்' என்று கூக்குரலிட வீட்டு வேலைக்காரர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள், எதிர்த்த வீட்டுக்காரர்கள் எல்லாருமாக 'திருடன், திருடன்' என்று கத்திக் கொண்டு ஓடிவந்து அம்மையப்ப பிள்ளையை குடுவை யிடுக்கிலிருந்து சரசரவென்று வெளியே இழுத்தார் கள். அவர், உருவம், நிறம், உடை எல்லாவற்றிலும் சாக்ஷாத் கள்ளனைப் போலவே இருந்தார். அப்படி யிருந்த ஆடுசாபட்டித் திருமேனியை அவர்கள் எல்லா ருமாகப் பிடித்துக்கட்டி வாயில் வந்தபடியெல்லாம் திட்டி அடிக்கத் தொடங்கினார்கள். ஒரு தமிழ் வித் வான் ஒருவர் தனிவழி போய்க்கொண்டிருந்த போது, திருடர்கள் வந்து மறிக்க அவர் ' என்னிடத்தில் ஐந்து ரூபாய் பெறும்படியான ஒரு அரைஞாண் மாத்திரந் தானிருக்கிறது. யானோ பட்டணத்திற்குள் செல்பவன்