உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பிள்ளைக்கு பிரஸாதம் கிடைக்கிறது! 257 வன், அரைவேஷ்டியுடன் விட்டுவிடு வீரனே வேண்டு கிறேன்' என்று வெகு இலக்கணமாய் மறுமொழி சொன்னதாக ஒரு கதையுண்டு. அதுபோல நடந்த உபசாரத்தை சகியாத பிள்ளையர்களும் ' இன்று நீவீர் * பிழைத்தீர் , இங்ஙனம் பிழையீர். என் கொடுமை. நீவிர் பலர் நான் தனி' என்று, ' நீங்கள் ஒருநாளும் தப்பிதம் செய்யாதவர்கள் இன்று என்னை அடித்துத் தப்பிதம் செய்தது என் காலக்கொடுமை நீங்கள் பலர் நான் ஒருவன்' என்ற அர்த்தத்தில் இலக் கணமாய்ச் சொல்ல, அவர்கள் ' ஏனடா பயலே நாங் கள் பிழைத்தோமா? இல்லாவிட்டால் கொன்று, போடுவாயோ? இனிமேல் பிழைக்கமாட்டோமா. என்னடா செய்வாய்? இவன் பக்காத்திருடன், தெற் குச் சீமைக் கள்ளன். என்ன தைரியமாய் நீங்கள் பிழைக்கமாட்டீர்களென்று சொல்லுகிறான்' என்று பின்னும் பலமாய்ப் பிரகாரம் சாதிக்க, பிள்ளையவர் கள் ' நான் புலவன் ' என்றார். 'ஏனடா புலையனா! பறையனா! பறைப்பயல் இங்கே வரலாயிற்றா ! நீ பறைத் திருடனா, ஏனடா பறைப்பயலே?' என, அம்மையப்பபிள்ளை 'நான்! நன் மரபில் உதித்தேன். அதை நீவிர் அறியீர்' என்று கதற, அது அவர்கள் காதுக்கு ' நான் நன்மறைவில் ஒளித்தேன் ' என்று பட்டது. படவே அவர்கள் ' நீ மறைவில் ஒளித்திருந் தால் எங்களுக்குத் தெரியாதோ திருட்டுப் போக்கிரி' என்று திட்டிப் பின்னும் பலமாய் மொத்த, பிள்ளைய வர்கள் 'நான் கள்ளனல்லேன். நும் இல்மாட்டு வௌவ வந்தேன் அல்லேன், விட்டுவிடுங்கள், இனித் தாங்காது இச்சரீரம், விடுமின் விடுமின்,' என்று பின்

  • பிழைத்தீர் ' என்ற வார்த்தையை பிழைசெய்தீர், தப் பிதம் செய்தீர்கள், என்னை யடித்தது உங்களுக்கு சரியல்ல என்ற அர்த்தத்தில் சொன்னார்.

மரபு - குலம் 17