பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



262 கமலாம்பாள் சரித்திரம் நாயேன், புழுவினும் புல்லன். இவ்வுலகங்களின் ஓட் டத்தினால் உதிரும் ஒரு துளிக்குக்கூட நான் ஈடல்லன் பெருங்கடலிலுள்ள ஒரு துளி உவர்நீர் அழகாலும் குணத்தாலும் என்னிலும் உயர்ந்தது. வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, காற்றில் உலரும் செய லற்ற சிறு மணலுக்கும் நான் ஈடல்ல. மலை, நதி, கடல், காற்று, மேகம், சூரிய சந்திர நட்சத்திராதிகள் முத லிய பெரிய குடும்பத்தை நிலை குலையாது, நெறி வழு வாது பாதுகாக்கும் லீலையையுடைய சந்நியாச சம் சாரியான உனக்கு நானும் ஒரு பொருட்டாகத் தோன்றியதையும், என்னையும்கூட அனாதையாய் விடச் சம்மதியாது ஆதரிக்க நினைத்த உன் நினைப்பை யும், கிருமிமுதல் கிரஹங்கள் வரை சலியாது சஞ்சரிக் கும் உனது சித்விலாசச் சிறப்பையும் நான் நினைக்கும் போது உன் கோபுரத்தைக் கண்டு தெண்டனிடுவதும் எனக்கு ஒரு சிரமமா?' தீர்க்கமாய்த் தியானித்து, மயிர்க் கூச்செறிந்து, உடல் முழுவதும் தரையில் பட சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து எழுந்தார். எழுந்தவு டன் சுவாமிகள் 'முத்துஸ்வாமி என் தங்கமடா நீ' * என்று மனதார மெச்சித் தட்டிக்கொடுத்து, ' தில்லை ஸ்தலமே ஸ்தலமப்பா. தில்லை தில்லையென்றாற் பிறவி இல்லை இல்லை யென்று மறைமொழியும். "தொல்லை தொல்லையென்ற கொடுவினை வல்லை வல்லை" யென்றக லும். சுவாமி உண்டு என்பதும் அங்கேதான், இல்லை யென்பதும் அங்கேதான். கடவுள் ஆனந்தத்தாண்ட வம் ஆடுவதும் அங்கேதான். அசைவற்ற வெளியாயி ருப்பதும் அங்கேதான். அறியாதாரும் அறிவைப் பெறு வது அங்கேதான். அறிந்தவர்கள் அனுபவிப்பதும் அங்கேதான். அது தெரியாமலா "தேங்கு நீர்சூழ்வ யல் தில்லைக்கூத்தனைப் பாங்கிலாத் தொண்ட

  • இதை குரு சிஷ்ய பாவத்தை அனுபவித்தவர் அன்றி மற்றோர் அறிதல் அரிது. சிஷ்யன் குருவைத்தேடிச் செல்வது