உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'சிதம்பர ரகசியம்' 263 Us னேன் மறந்துய்வனோ" என்று சொன்னான் எங்கள் அப்பன். ' அரியானை யந்தணர்தஞ் சிந்தையானை யருமறையின கத்தானை யணுவை யார்க்குந் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக் கரியானை நான் முகனைக் கனலைக் காற்றைக் கனை கடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம பிறவா நாளே . சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொளியை யிருநிலனும் விசும்பும் விண்ணு மேழுலகுங் கடந்தப்பானின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே . ' உருவமும் இங்கேதான்; ஒளியும் இங்கேதான். சிருஷ்டியும் சம்ஹாரமும் இங்கேதான். பசியா மருந்தளிக்கும் பரமரகசியத்தி லசையாமலே யாடு மம்பல நாதனைக் காணாத கண்ணென்ன கண்ணோ.” போலவே குருவும் சிஷ்யனைத்தேடி அலைகிறார். ஒரு ஊரில் ஒரு அரசன் வேதாந்த விசாரணையில் ஆசைகொண்டு சிஷ் யனுக்குத் தக்க குரு வேண்டும் என்று முரசறைவித்தான். வள்ளுவன் முரசறைந்து வரும்போது ஊருக்கு வெளியில் ஓர் குப்பை மேட்டில் கூர்மாசனமிட்டு எழுந்தருளியிருந்த ரிஷி ஒருவர் அவ்வள்ளுவனை அழைத்து குருவுக்குத் தக்க சீஷன் வேண்டுமென்று முரசறையச் சொன்னார். அவன் அவ்வாறு அறைந்த பறையோசையைக் கேட்டு அரசன் திடுக் கிட்டு, உண்மை விசாரித்து, மன மகிழ்ந்து குருவையடைந்து பிறவி கடந்தான் என்ற ஒரு கதை கூட உண்டு. தேடிப்பெற்ற சிஷ்யனிடத்து குருவுக்கு அந்தரங்கமுள்ள சின்மயமான பேரின்ப வாஞ்ஜை ஜனிக்கும். இருவரும் பிரம்மத்தை யறிந் தனுபவிக்கும்பொழுது குரு சீஷன், சிறியன் பெரியன் என்ற பேதாபேதமற்ற சமரசநிலையில் இருப்பது வேதாந்திகள் அறிந்த அதிசயம்.