பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



278 கமலாம்பாள் சரித்திரம் கலந்து விட்டது என்று களித்தாளே ; அதற்குத் தண் டனையா இது, தெய்வமே !' என்று தவித்தான். 'இந்த ஆகாசம்போல் கடவுள் கிருபை அளவற்றிருக்க நமக்கு என்ன குறை!' என்று கர்வித்தவளுக்கு இது வேண்டி யது தான், என்று தலையசைத்தான். 'நாமிருவரும் சந் திரனும் ரோகிணியும் போல ஒருநாளும் பிரியவே மாட் டோம். சாகிறபோதுகூட இரண்டு பேரும் சேர்ந்து ஒரேநாளிலேதான் சாவோம். செத்த பிறகு துருவன், அருந்ததி, ரோகிணி இவர்கள் இருக்கிறது போல நாமிருவரும் ஜோடியாக அடுத்தடுத்து இரண்டு நட் சத்திரமாக சுக்கிரனைப் போல ஆகாயத்தில் பளீர் , என்று மின்னிக்கொண்டு வேடிக்கையாக இருப்போம் என்று பிதற்றினையேடி பயித்தியகாரி, இவ்வளவு கர் வம் ஆகுமா என்று கடவுள் கண்டிருக்கிறார் பார்த் தாயா! கண்டிக்கட்டும், கண்டிருக்கிற தெல்லாம் கண்டிக்கட்டும்'--என்று பெருமூச்சு விட்டான். பிறகு உட்கார இருப்புக்கொள்ளாமல் எழுந்து 'இந்த நிலாவையும், தென்றலையும் போலிருக்கி றது நம்முடைய அன்பு என்று உபமானங்கள் கொண்டுவந்தாயேடி., ஐயோ நாம் அனுபவித்ததும், விளையாடினதும், ஆனந்தம்பட்டதும் எல்லாம் கன வாகப் போய்விட்டதே' என்று சொல்லி அங்கு மிங் கும் உலாவினான். பிறகு தன்னைப் பாரா 'க் காக்கும் காவலாளரின் குரல் காதில்பட, 'போக்கிரி கவர்ண் மெண்டு, இதுவும் ஒரு கவர்ண்மெண்டா! காமாட்டி சர்க்கார், அயோக்கியப் பையல்கள் :, அந்நியாய ராஜ் ஜியம், தொலையக் காலம் வந்துவிட்டது. இந்த கவர்ண்மெண்டுக்கு சொல்லுகிறேன் வழி. கேள்வி முறை கிடையாதா? விசாரணை, இழவு, எட்டு, ஒன் றுமா கிடையாது! நான் எழுதின விண்ணப்பத்துக் குக் கூடவா பதில் கிடையாது. அடா, இன்ன குற்றத் திற்காக நீ சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கிறாய் என்று சொல்லித் தொலைக்கவேண்டாமோ ! இப்