பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அமெரிக்கா தேசத்தவர்களுக்குக் கடிதம் 279 பொழுது ஒன்றும் பேசப்படாது. இவர்கள் கையை விட்டு வெளியேறினவுடனே சொல்லுகிறேன் வழி. சுப்பராயனுக்கு எழுதின கடிதம் நாளைப்போய்ச் சேரும். அவன் நாளையே பதில் எழுதினால் இரண்டு மூன்று நாளிலேயாவது வந்து விடாதா. ஒருவேளை அவனே வந்தாலும் வரலாம். ஐயோ என் மாமியார் ஒரு மகாலட்சுமி ; அவளுக்கு வந்த கஷ்டங்களைப் பார். என் மாமனார், அவர் பெருந்தன்மையும், புத்தி விசாலமும், அவர்கள் ஒருவரோடொருவரிருந்த அன் பும், ஐயோ! அவர்களுக்குக்கூட இப்படி வருமா! அப்பப்பா! இந்த உலகம் வெகு கெட்ட உலக மப்பா!' என்று வெறுத்தான். பிறகு சந்திரனும் ரோகிணியும் மற்ற எண்ணிறந்த நட்சத்திரக் கூட்டங் களால் சூழப்பட்டு ஆகாயத்தில் சிங்காரமாய் கம்பீர மான அழகுடன் மெதுவாய்ப் பவனி செல்வதைச் சிறிதுநேரம் உற்றுப்பார்த்து ' ஐயோ லட்சுமி, உன்னை விட்டும் நான் பிரிந்திருப்பேனோ ; அமெரிக்கா தேசத்தவர்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று சொன்னாயே எப்படி அந்தக் கடிதம்!* - மகா - ராஜராஜ-ஸ்ரீ அமெரிக்கா தேசத்து மகாஜனங்கள் அவர் களுக்கு அனேக ஆசீர்வாதம். க்ஷேமம் க்ஷேமத்துக்கு எழுதக் கோருகிறோம். எங்கள் தேசத்து சக்கரவர்த் தியாகிய சந்திர மகாராஜாவும், பட்டமகிஷியாகிய ரோஹிணி மகா ராணியும் உங்களுடைய தேசத்துக் குப் பவனி வந்திருக்கிறார்கள். இவ்விடத்தில் நாங்கள் ஏழைக் குடிகள் அவர்களுடைய தரிசனமில்லாமல் தவிக்கிறதினாலே, அவர்கள் இவ்விடம் விஜயம் செய் யும்படி நாங்கள் வேண்டுகிறதாய் எங்கள் விண்ணப் பத்தை அவர்களுக்குத் தெரிவிக்க கோருகிறோம். இப்படிக்கு (இத்தேசத்துப் பிரஜைகளுக்காக) ஸ்ரீநிவாசனும், லட்சுமியும். சந்திரன் இங்கே மறைந்திருக்கும்போது அமெரிக்கா தேசத்தில் பிரகாசிக்கிறதென்பது யாவருக்கும் தெரியும்.