280 கமலாம்பாள் சரித்திரம் - - - என்று இப்படி யெல்லாம் விளையாடினாயே,' என்று சொல்லி அவளுடைய அழகையும், அவளுடைய குரலையும், அவளுடைய பாட்டையும், படிப்பையும், புத்தி விஸ்தாரத்தையும், அவளுடன் தான் விளை யாடின விளையாட்டுகளையும் நினைத்து, நினைத்து, வாயும், நெஞ்சும், உலரமயங்கி, தன்னையும் தனக்குப் பலமுறை உருவெளியாகத் தோன்றிய தன் மனைவி யையும், உயர விளங்கும் சந்திரனையும், தன்னைக் காக்கும் காப்பாளரையும் முறை முறையே நோக்கி, இரவு முழுவதும் வாடும் சந்திரனுடன் தானும் வாடிச் சோர்ந்திருந்தான். பொழுது விடிந்து சிறிது நேரத்துக்கெல்லாம் இரண்டு காவலாளிகள் உருவின கத்தியும் கையுமாய் ஸ்ரீநிவாசனைக் கச்சேரிக்கு விசாரணைக்காக இட்டுச் சென்றார்கள். குற்றம் பெரிய குற்றமானதினாலும், விசாரணை பெரிய விசாரணையானதாலும், ஐந்து நியா யாதிபதிகள் உட்கார்ந்து விசாரணை செய்தார்கள். இவ்வேடிக்கையைப் பார்க்க ஊர் முழுவதும் கச்சேரி யில் வந்து கூடியிருந்தது. கைதி கூட்டிலடைபட்டு நிற்கிறான். இரண்டு பக்கத்திலும் இரண்டு போர் வீரர்கள் உருவின கத்தியும் கையுமாய்க் காவல் நிற் கிறார்கள். சர்க்கார் தரப்பு வக்கீலாகிய பெரிய துரை யவர்கள் கால் வரையில் தொங்கவிட்ட சட்டையுடன் கம்பீரமாய் எழுந்து, மூக்கில் கண்ணாடி. தரித்து, குற் றப் பத்திரிகை படிக்கத் துவக்கினார். அதன் விவரம் யாதெனில் : 'புதுச்சேரி ராஜ்ஜியத்தின் முதல் மந்திரி திவான் சங்கரய்யர் என்று ஒருவர் இருந்தார். அவர் சர்க்கார் திரவியங்கள் சிலவற்றை அபகரித்துப் பட் டணத்தில் தன் பிள்ளைக்கு அனுப்பிவிட்டார். குற்றம் வெளிப்பட இருந்த தருணத்தில் குடும்ப சகிதமாய் ராஜ்ஜியத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டார். ஸ்ரீநிவா சன் ரூபத்திலும், நிறத்திலும், சங்கர அய்யருடைய மகனைப்போல இருந்தான். ஆதலால் அவனைச் சங்