34 பிரம்மானந்த சுகம் - ஒர் அதிசய சம்பவம் இவர்கள் நிலைமையிவ்வாறாக, சச்சிதானந்த சுவாமிகளும் முத்துஸ்வாமியய்யரும் பின்னும் சில சிஷ்யர்களுமாக ஜீவன் முத்தி க்ஷேத்திரமாகிய காசிமா நகரை யடைந்து அங்கே ஹனுமந்த கட்டத்தின் ருகே ஒரு மடத்தில் தங்கினார்கள். சச்சிதானந்த சுவா மிகள் காசியில் வெகு பிரபலம். அவ்விடத்தில் அவ ருடைய சேவைக்காகக் காத்திருப்பவர்கள் அனேகர். அவர், மத்தியில் காணப்படாது, மறுபடி வந்திருக்கிறார் என்ற செய்தி பரவினவுடனே திரள் திரளாய் ஜனங் கள் வந்து சேவித்தார்கள். அவ்வாறு சேவித்தவர் களில் சச்சிதானந்த சுவாமிகளுடைய வைபத்தையும் முத்துஸ்வாமியய்யருடைய ஆனந்த நிலைமையும் கண்டு புகழாதவர்களில்லை. குழந்தைகளெல்லாம் பிரம்மானந்த ஸ்வரூபராகிய சுவாமிகளிடத்தில் வெகு பிரியம். குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும்போதும், வரும் போதும் அவரிடம் வந்து அவர் அவர்களுக்காக சேகரித்து வைத்திருக்கும் தேங்காய் பழங்களை வாங்கி வழி நெடுகத் தின்று கொண்டே போகும். மற்ற வேளை மடத்தில் வந்து கூச்சலிட்டு விளையாடும். அப்படி விளையாடியும் அந்த மகானுடைய நிஷ்டை கலையாது இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படும். இரண்டு வயது, மூன்று வயது நாலு வயதுக் குழந்தைகளெல்லாம் அவர் தோள் மேலும், தலை மேலும், கால் மேலும், கை மேலும் ஊரிக்கொண்டேயிருக்கும். அவரை அந் தக் குழந்தைகள் 'தாத்தா' என்று அழைப்பது வழக் கம். முத்துஸ்வாமியய்யரும் அவர்களிடத்தில் சுவாமி கள் போலவே பட்சம் பாராட்ட, அவரும் அவர்களுக்கு மாமா ' ஆய்விட்டார். குழந்தைகள் அவருடைய
பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/298
Appearance