கைவிட்ட 'லக்ஷ்மி' திரும்புகிறாள் 239 -- - - --- தோள் மேலுமேறிக் குதிக்கத் தொடங்கின. சுவாமி களுடைய உபதேச பலத்தினால் குழந்தைகளெல்லாம் அவருக்கு பிர்ம்மஸ்வரூபமாய்த் தோன்றும். அவ்வாறு தோன்ற கடவுளுடன் பிரத்தியட்ச ஸரஸம் செய்வது போல் அவர் அவர்களுடன் விளையாடி வந்தார். அக் குழந்தைகள் எல்லாரிலும் துரைசாமி என்னும் ஒரு குழந்தைமேல் அளவிலாபிரியம் ஏற்பட்டது. அக் குழந்தை லட்சணமாயிருந்ததினால் மாத்திரமல்ல, அதனுடைய முகவிலாசத்திலும் செய்கையிலும் பிர்ம் மதேஜஸ் தீர்க்கமாய்ப் பிரதிபலித்ததால் அக்குழந்தை யுடன் அவர் ஸாட்சாத் கோபாலனைக் குழந்தையாய்ப் பெற்ற வசுதேவர் போலக் களித்து விளையாடினார். இப்படியவர் நிஷ்டையிலும் வியவகாரத்திலும் தன்னை மறவாது சுகப்பட்டுக்கொண்டு இருக்கும் நாட் களுள் ஒரு நாள் திடீரென்று அவருடைய மடத்துக் குள் இரண்டு பிராமணரும் ஒரு சூத்திரனுமாக மூன்று பேர் சேர்ந்துவந்து அவரைச் சேவித்தார்கள். அவர் களைக் கண்டு முத்துஸ்வாமியய்யர் ஆச்சரியப்பட்டு நிற்க, அவர்கள் மூவரும் ' சுவாமி, நாங்கள் செய்த அபராதத்தை மன்னித்தருளவேண்டும்.' என்று வேண் டினார்கள். அவர்களுள் சூத்திரனாயிருந்தவன் 'சுவாமி, நான் செய்த குற்றத்துக்கு இது ஒரு பரிகார மாகாது' என்று சொல்லி, கூடவந்த பிராமணர்களிடம் வாங்கி பாங்கு நோட்டுகளாக ஒரு பெரிய திரவியக் குவியலை அவருடைய பாதத்தில் சமர்ப்பித்தான். அவ்வாறு சமர்ப்பித்தவன் நமது பழைய சினேகிதனாகிய பேயாண்டித்தேவனே. அவன் வடதேசங்களில் சென்று கொள்ளையிட்டுச் சில வருஷங்களுக்குப் பின்னர் தன் னுடைய எதிராளியான முத்துஸ்வாமி அய்யருடைய நிலைமையைக் கண்டு வருவோம் என்று சிறுகுளத்துக்கு வர, ஊர் முழுவதும் மதியை யிழந்த இரவு போலவும், கணவனை யிழந்த கைம்பெண்ணெனவும் ஒளி மழுங்கி, 19