பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



26 கமலாம்பாள் சரித்திரம் விசேஷ சக்தி உள்ளது பற்றியல்லவோ அவள் வம்பர் மகாசபைக்கு அக்கிராசனாதிபதியானாள். அவளைப்பற் றியும் அவளுடைய சபையைப்பற்றியும் பின்னால் நாம் பலமுறை சொல்லவேண்டிவரும். சுப்பு நமக்கு முக் கிய தோழி. எப்படி கூனி, சூர்ப்பநகை முதலிய உத் தம ஸ்திரீகள் இல்லாவிடில் ராமாயணம் நடந் திருக்க மாட்டாதோ, அப்படியே நாம் எழுதி வருகிற அற்புத சரித்திரமும் சுப்பம்மாள் இல்லாவிட்டால் நடந்திருக்கமாட்டாது. ஆகையால் தேவர்கள், ரிஷி கள் முதலிய சாதுக்கள் எல்லாரும் கூனி, சூர்ப்பநகை இவர்களுக்கு வந்தன முள்ளவர்களாயிருப்பதுபோல் நாமும் சுப்பம்மாளிடத்தில் அதிக விசுவாசமாயிருப் போமாக. கமலாம்பாள் 'வாரும்' என்றவுடன், சுப்பு அவளை: நோக்கி மதுரையிலே தானே கல்யாணம் நல்ல வேளை அம்மா! மனதிற்கு இப்பொழுதுதான் சமாதானப்பட் டது' என; கமலாம்பாள், 'ஏதோ தெய்வ சங்கல்பம் போலிருக்கின்றது. நாம் செய்கிறோம் நாம் போகி றோம் என்று நினைப்பதேயல்லாமல் யதார்த்தத்தில் நாம் செய்கிறது ஒன்றுமில்லை,' என்றாள். -சுப்பு, 'அவ்வளவுதானே; அப்படித்தானே போக வேண்டும். அதைவிட்டு வீண் வார்த்தை செலவழிப் பதில் கலகத்தைத் தவிர வேறு லாபமுண்டோ ?' என, கமலாம்பாள் நாம் யாரையாவது தவறிப்போய் ஏதா வது சொல்லிவிட்டோமோ' என்று சந்தேகித்து ' வார்த்தையா? என்ன வார்த்தை? எப்பொழுது சொன்னேன்?' என்றாள். சுப்பு, நீயா! நன்னாயிருக்கு தங்கக்குடம் இன்னால் உனக்கே தகும்' என்று சொல்லி முடிப்பதற்கு முன் கமலாம்பாள் ' இவள் யாரோ சொன்ன வார்த்தையை நம்மிடம் சொல்ல வருகிறாள், இதற்கு இடம் கொடுக்கக்கூடாது' என்று எண்ணி சீக்கிரம் உள்ளே சென்று சுப்பம்மாளுக்கு