உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கலக நெருப்பு பற்றுகிறது 27 நெருப்புக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு 'பலர் பல விதம் சொல்லுவார்கள், ஊர்வாயை மூட நம்மாலாகு மோ? ஈரப்புடவையுடன் நிற்கிறீர்களே!' என்றாள். சுப்பம்மாளுடைய தொழிலும் திறமையும் அவ ளுக்கு நன்றாய்த் தெரியும். ஆகையால் அவளைச் சீக் கிரம் வெளியே அனுப்பிவிட்டால் தான் க்ஷேமம் என்று எண்ணி ஜாடையாய் 'ஈரப்புடவையுடன் இருக்கிறீர் களே' என்றாள். சுப்பு அந்தக் குறிப்பை அறிந்தா லும் பொன்னம்மாளுக்கும் அவளுக்கும் கலகம் மூட்டு வது அதிக அவசியமாயிருந்தபடியால், அவள் வெளியே பிடித்துத் தள்ளச் சொன்னாலும் போவ தில்லை என்று தீர்மானம் செய்துகொண்டு அருகில் இருந்த ஒரு முட்டையை எடுத்து நெருப்பை மூட்டிக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள். சுப்பம்மாளுக்கும் அவள் சபையாருக்கும் கமலாம்பாளிடத்தில் அதிக வெறுப்பு உண்டு. ஏனெனில் அவள் வம்பர் மகா சபையைப்பற்றிக் கொஞ்சமும் கவனிப்பதேயில்லை. அதில் அரை நாழிகையாயினும் சேர்வதில்லை. அதைச் சற்றும் லக்ஷியம் செய்யாதவள் போல் அவள் நடந்து வந்தாள். மேலும் கணித சாஸ்திரத்தில் தேர்ச்சிபெற்ற வித்வான்களுக்கு கடினமான கணக்குகளைச் செய்வ தில் விசேஷ திருப்தி. காமவிஷயத்தில் அழுந்தி கற் பழிப்பதில் கௌரதாப்பட்டம் பெற்ற விட புருஷர் களுக்கு அனுபவிப்பதற்குத் தயாராய்க் கைவசத்தி லுள்ள சொந்த ஸ்திரீகளைக்காட்டிலும் குட்டிச்சுவ ரேறி குடுமி அறுபட்டு வருத்தத்துடன் அடையும் அன்னிய ஸ்திரீகளை அனுபவிப்பதில் அதிக திருப்தி. அதுபோல் சகல வித்தையிலும் கைதேர்ந்து 'நாரதருக் கும் மேல்' என்று பிரசித்தி அடைந்த சுப்பம்மாளுக்கு சுலபத்தில் சண்டை செய்யும் சாமானிய ஜனங்களுக் குள் சண்டை மூட்டுவதைக் காட்டிலும் சண்டை என்பதையே அறியாத சாதுவாகிய கமலாம்பாளைக்