34 கமலாம்பாள் சரித்திரம் - - - - - - - -- புறப்பட்டு வந்து, மரக்கொம்புகள், வண்டிக்கூடுகள், வீட்டுக் கூரைகள், மதிற்புறங்கள், ரஸ்தாப் பாதைகள் எங்கும் ஏராளமாய் நிரம்பிவிடுவார்கள். புருஷர்களுக் குத்தான் இந்த உற்சவம் என்று நினைக்கவேண்டாம். ஸ்திரீகளும், கூர்மையான மூக்குள்ள மனிதர்களை கூப் பிடு தூரத்திற்கப்பால் தரத்தத்தக்க மஞ்சளெண் ணெய், வேப்பெண்ணெய், முதலிய 'வாசனை'த்தைலங் களைத் தடவிக்கொண்டு, செவந்திமாலை, புதுப்புடவை, பாசிமணி, பட்டோலை முதலிய சர்வாபரண பூஷிதராய் புருஷருடன் வேற்றுமை தெரியாது வந்து நெருங்கி விடுவார்கள். பளபளவென்று சீவித் தைலந்தடவிய கொம்புகளுடன் உடல் நிறைய, புஷ்ப மாலைகளை ஏரா ளமாய் அணிந்து, கழுத்தில் உருமாலும் கம்பீரமான நடையும் பயங்கரமான பார்வையும் கொண்டு கண் டோர் ரிஷபராஜர்கள் என்று சொல்லும்படியான உயர்ந்த ஜாதிமாடுகள் தொழுவுக்குள் நெருங்குவதும், அங்கு நின்று உருமால் கொண்டு ஓட்டோட்டமாய் ஓடுவதும், மனிதர்கள் அவற்றின்மேல் உயிரை வெறுத் துப் பாய்ந்து அவற்றைப் பிடிப்பதும், பிடித்து உரு மாலைக் கழட்டிக்கொண்டு ஹுய் என்று முடுக்கு வதும், மனிதர்களை அவைகள் தூக்கிப் போட்டுவிட்டு அலட்சியமாய் ஓடுவதும் நாகரிகமற்ற அந்த மனிதர் களுக்குக் கண்கொள்ளாத காட்சியாயிருக்கும். அம் மாடுகளில் எல்லாம் கூட்டத்தைக் கண்டு வெருண்டு ஓடாமல் நின்று பாயும் மாட்டிற்கு 'நின்று குத்திக் காளை' என்று சொல்லுவது வழக்கம். விசேஷ சந்தோ ஷத்தை யுண்டுபண்ணக்கூடிய நின்றுகுத்திப் பாயும் மாடு ஒன்று வந்துவிட்டால், மூலைக்கொருவராய் அதை “டுர்ர்ரி, நார்ரி' என்று கூவிக் கோபமூட்டி வேடிக்கை செய்வார்கள். அதுபோலவே முத்துஸ்வாமி அய்யர் கழுத்தில் தும்பைக் கட்டி கமலாம்பாள் 'பேஷ், பேஷ்' என்று சிரிக்க, சுந்தரம் அவரை 'டுர்ர்ரி' பழக்கினான். அவர் ' என்ன செய்கிறான் பார்ப்போம்' என்று