'இதோ பாரு என் கம்பு பேஷான கம்பே' 35 தலை குனிந்து புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டு சும்மா இருக்க, சிறுவன் 'முட்டு அப்பா, முட்டு. நீதான் மாடாம், முட்டுவாயாம்' என்று முற்றும் திருந்தாத மழ லைச்சொல்லால் சொன்னான். பின்னும் அவர் சும்மா இருந்தார். அவர் மனைவி 'அந்த மாடு அப்படித்தான் இருக்கும், இந்த குச்சி எடுத்துக் குத்து' என்று சொல் லவே சுந்தரம் தும்பை இழுத்துப் பிடித்துக்கொண்டு குச்சியை எடுத்து 'பை, பை' என்று ஓட்டத் தொடங் கினான். அய்யர் 'இதேதடா இந்தப்பயல்!' என்று சொல்லிக்கொண்டு சுந்தரத்தைப் பார்த்து 'நான் மாடில்லையாம், அம்மாள் தான் மாடாம், இந்தத் தும் பை அவள் கழுத்தில் கட்டு, நீயும் நானும் ஓட்டுவோம்' என்று சொல்ல, சுந்தரம் ' ஆமாம் அப்பா' என்று சொல்லி அவர் தும்பை அவிழ்த்து சாப்பிட்டுக்கொண் டிருந்த கமலாம்பாள் கழுத்தில் கட்டி அவளை ஓட்ட ஆரம்பித்தான். கமலாம்பாள் நான் *பொம்மனாட்டி; நான் தான் மாடா! அப்பாதான் மாடு. (அவரைப் பார்த்துக்கொண்டு) கொழுத்த உருமால் கட்டிக்காளை, அவரை ஓட்டு' என்றாள். சுந்தரம் மாட்டு விளை யாட்டை மறந்து 'இதோ பாரு என் கம்பு பேஷான கம்பே' என்று அவளை அடித்து 'நீ அழு அம்மா, அழு' என்றான். அவள் 'ஆமடா அப்பா அழுகிறேன்' என்று சொல்லவே பின்னும் அவளை அடித்தான். சுந்தரத்தினிடத்திலிருந்த சாமான்களைப் பார்த் தால் வெகு வினோதமாயிருக்கும். ஒரு ஓட்டைக் கொட்டாங்கச்சி, ஒரு கயிறு, ஒரு மாக்கல், ஒரு பென் சில், ஒரு வெள்ளிக்கல், ஒரு உடைந்த பம்பரம், இரண்டு கோலியுருண்டை , ஒரு துணிப்பந்து, இது போன்ற பல வஸ்துக்கள் அவனிடத்தில் இருந்தன. அவனுக்கு இவைகளே ஐசுவரியமாக விளங்கின. உத்
- பெண் பெண்டாட்டி என்பதே - பொம்மனாட்டி --என்று மருவி வழங்கப்படுகிறது.