பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



36 - கமலாம்பாள் சரித்திரம் தியோகஸ்தர்கள் அடிச்சட்டை, மேல் சட்டை, கைக் குட்டை, கால் 'நெஜார், ஜோடு , குடை, தலைப்பாகை, கடிகாரம் முதலிய வேஷங்களுடன் கச்சேரிக்குப் போவதுபோல, சுந்தரமும் மாட்டுத் தும்பு, பட்டுக் கயிறு, விசிறிக்கட்டை முதலிய கௌரவ சின்னங்க ளுடன் விளையாட்டுக்குப் போவான். முத்துஸ்வாமி அய்யரையும் அவர் மனைவியையும் கண்டுவிட்டால் அவனுக்கு வெகு உற்சாகம் வந்துவிடும். அவர்கள் அவனுக்கு முக்கியமான விளையாட்டுத் தோழர்கள், அவனுடன் 'கண் பொத்துதல்,' 'மாதுமாது,' 'கிட்டி அடித்தல்' முதலிய விளையாட்டுகளை அவர்கள் விளை யாடும்போது வெகு வேடிக்கையாயிருக்கும். அவன் கமலாம்பாளை அடித்தவுடன் கமலாம்பாள் அழுததாக பாவனை செய்யவே, அவன் அதிக திருப்தி அடைந்தவ னாய் முத்துஸ்வாமி அய்யரிடம் வந்து 'துட்டு கொடுப் பா' என்று அவர் முதுகின்மேல் ஏறி குடுமியைப் பிய்க்க எத்தனிக்கும்போது கமலாம்பாள் சாப்பிட்டு எழுந்திருந்து கையலம்பிவிட்டு தன் பர்த்தாவின் அரு கில் உட்கார்ந்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் திடீரென்று ஒரு பெருமூச்சு விட்டாள். அவளுடைய மலர்ந்த முகம் மாறியதைக்கண்ட அய்யர், 'ஏன் என்ன சங்கதி? என்று கேட்க, அவள் 'ஒன்றுமில்லை' என்றாள். அவர் மறுபடியும் அழுத்திக் கேட்க அவள் தன் மனவருத்தத்தை அவருக்கும் சொல்லி அவரையும் சஞ்சலப் படுத்துவானேன் என்ற எண்ணத்துடன் மறுபடியும் 'ஒன்றுமில்லை' என்றாள். அவர் அவளை சொல்லத் தான் வேண்டும்' என்று கட்டாயம் செய் கார். அவள் என்னையறியாமல் எனக்கு வருத்தம் வரு கிறது. இன்று பொழுது நன்றாய் விடிந்தது. நான் சுந்தி ரத்தை அவன் அம்மாளிடம் போகவேண்டாமென்று 'போதிக்கிறேனாம். அவனை நான் கைம்பெண் வளர்த்த கழிசறை ஆக்கிவிட்டேனாம். நான் தட்டுவாணிக் கைம் பெண்டாட்டியாம், எனக்குக் கிடைத்த மரியாதை'