பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்பாசிரியர் முன்னுரை

ச்சமயத்தில் காலஞ்சென்ற ராஜமய்யரவர்களின் கமலாம்பாள் சரித்திரத்தை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த நினைப்பது வெறும் அசட்டுத்தனம்—அல்லது அதிகப் பிரசங்கித்தனம். இருந்தாலும் சம்பிரதாயத்தை யொட்டி 'நாலுவார்த்தைகள்' இங்கே சொல்லி வைக்கலாமென்பது என் உத்தேசம்.

தமிழ் நாட்டினரின் போன தலைமுறை எல்லா வகைகளிலும் உயர்ந்திருந்தது என்கிறார்கள். காலம் மாறிவிட்டது. அந்த அழகு வாழ்க்கை தேய்ந்து விட்டது. ஆனால்? அந்த அழகை யாராவது படம் பிடித்துக் கொடுத்தால்? அதை ஒரு மேதாவிதான் செய்ய முடியும். சாதாரண சித்திரக்காரர்களின் திறமையை மீறியது அக்காலத்து வாழ்க்கை.

மேதாவிலாஸம் ததும்ப ஸ்ரீ ராஜமய்யர் நமக்காக அக் காலத்து வாழ்க்கையை அதிசயமான ஒரு வர்ணப்படமாக எழுதியிருக்கிறார். நமது முன்னோர்களின் வாழ்க்கை வளம் பெற்று எவ்வளவு சீரும் சிறப்பும் பொருந்தியிருந்த தென்பதை நாம் திகைக்கும்படி எடுத்துக் காட்டுகிறார் அந்த ஆசிரியர்.

தமிழ் பாஷையில் அவசியம் படித்தாக வேண்டும் என்று சில புஸ்தகங்களைப் பொறுக்கி எடுத்தால் அதில் கட்டாயம், ஏன்!—முதன்மையாகவே இடம் பெற தகுதி யுடையது இப்புஸ்தகம். இன்னும் நூறு வருஷங்கள்