பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கழித்துப் படித்தாலும் புதுப்புது அழகைக் காட்டும் அற்புதமான நாவல்.

இத்தகைய அரிய நூல் ஒவ்வொரு தமிழரிடம் இருக்க வேண்டுமென்ற அவசியத்தை உத்தேசித்து சிரமத்தையும் கஷ்டத்தையும் பாராமல் 6-ம் பதிப்பு இப்பொழுது வெளி யிடப்பட்டிருக்கிறது. இப்பதிப்பை பொலிவுடன் மிக நேர்த்தியான அமைப்பில் வெளிவருவதற்கு உதவி செய்த ஹிந்தி பிரசார பிரஸ் காரியாலயத்தினருக்கும், என்னுடன் கூடமாட ஒத்துழைத்த நண்பர் ஸ்ரீ ஆ. வே. ஜயராமன் (ஜெமன்) அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.

தமிழ் மக்களிடையே 40 வருஷங்களுக்கு முன் பிரபல மடைந்து அவர்கள் ஆதரவை பெற்ற 'விவேக சிந்தாமணி' பத்திரிகையில் வெளியாகியுள்ள அநேக கட்டுரைகள், கதைகள், நாவல்கள் முதலியவைகளை பொறுக்கி எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக புத்தக ரூபத்தில் வெளியிட உத்தேசித்திருக்கிறோம். இதற்கு முன் ஆதரவளித்த தமிழர்கள் அந்த ஆதரவை தொடர்ந்து காட்டி ஊக்கமளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

விவேகசிந்தாமணி, எஸ். நடராஜன்,

'லலிதாலயா' மைலாப்பூர். (பதிப்பாசிரியர்.)

அக்டோபர், 1944.