பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



' எந்த போக்கிரிப் பையன் பண்ணின வேலை' 55 வாத்தியார் அப்பா, நான் தான் அதிகப்பிரசங்கி, நீங் கள் எல்லாம் பெரியவர்கள்' எனக் கோபித்துக் கொண்டு பின்னுள்ள பாட்டுகளை வாசித்து அதிவேக மாய் அர்த்தம் சொல்லிக்கொண்டு போகவே, பையன் கள் இவர் பிரசங்கத்தைச் சற்றும் கவனியாமல் சிலர் வம்பு பேசினார்கள், சிலர் அடுத்த மணிப்பாடத்தைப் படித்தார்கள், சிலர் தூங்கினார்கள். சிறிது நேரத்திற் கெல்லாம் வாத்தியாருக்கும் தூக்கம் வந்துவிட்டது. " நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம் ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநல் பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக்கொடுபோந்து - தங்கோவின் முன் வைத்தார் தாழ்ந்து என்ற பாட்டைப் படிக்கத்தொடங்கி 'நாடி மடவன் னத்தை நல்லமயிற்' என வாசித்தார். 'குழாம்' என்ற வார்த்தை தூக்கத்தில் போய்விட்டது. வாத்தியார் தலை இரண்டு தடவை ஆடிற்று. பிறகு அவர் திடுக் கிட்டு தன் சிவந்த கண்களை விழித்துக்கொண்டு 'ஓடிவளைக்கின்ற தொப்பவே - நீடியநல்' என்று வாசித்த பிறகு ஐந்து நிமிஷம் மௌனம். பிறகு சற்றுக் கண் விழித்துக்கொண்டு ஈனஸ்வரத்துடன், தூங்கவில்லை போலும், ஏதோ ஒன்றை யோசித்தவர் போலும் பாவனை பண்ணிக்கொண்டு, அப்படியா! இப்பொழுது சரியாயிருக்கிறது' எனச் சொல்லிக்கொண்டே 'பைங் கூந்தல் வல்லியர்கள் பற்றி' என்று படித்தார். அப் புறம் பேச்சு மூச்சைக் காணோம். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சில பையன்கள் வாத்தியார் தூங்கிப் போய்விட்டார் என்ற செய்தியை மற்றவர் களுக்கும் பரவச்செய்யவே கிருஷ்ணஸ்வாமி என்ற ஒரு பையன் 'பேசாமல் இருங்கள், வேடிக்கையைப் பாருங்கள்' என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் சீமைச் சுண்ணாம்பைப் பொடிபண்ணி சந்தடி செய்யாமல் தன் சிரிப்பையடக்கிக்கொண்டு மேஜையிலுள்ள