பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கமலாம்பாள் சரித்திரம் மைநிறைந்த ஒரு மைக்கூட்டிற்குள் போட்டு விட் டான். அந்த மை சற்று நேரத்திற்கெல்லாம் 'டபீர்' என வெடித்துப் பொங்கி அம்மையப்ப பிள்ளையின் கண், மூக்கு, முகம் சட்டைகளிலெல்லாம் பாயவே , அவர் பாவம்! திடுக்கிட்டு விழித்து 'இது எந்தப் போக்கிரிப்பையன் பண்ணின வேலை!' என்று எழுந் திருக்க, பையன்களெல்லாம் கொல் என்று சிரித்தார் கள். தென்னாலிராமனோ வாத்தியார் நிலைமையைக் கண்டு பரிதபித்தவன் போலக் கிட்டச் சென்று 'அட்டா, மூக்கு முகம் எல்லாம் மையாய்விட்டதே. அதாவது போகிறது; சட்டை யெல்லாம் மையாய் விட்டதே ஸார், இது எந்தப்பயல் பண்ணின வேலை. முட்டாள் பயல்கள், இருக்கிற ஒரு சட்டையிலும் மையைக் கொட்டிவிட்டால் அப்புறம் ஸார் நாளை என்ன பண்ணுவார் என்று அறியவேண்டாமா! நீங் கள் இருக்கிறபோதே யார் தான் இப்படிச் செய்யக் கூடும்? நீங்கள் இன்றைக்குத் தூங்கக்கூடவில்லையே!' என்று சமாதானம் பண்ண, வாத்தியார் 'எந்தப்பயல் செய்தது? மரியாதையாய் உண்மையைச் சொல்லி விடட்டும், மன்னித்துவிடுகிறேன். இல்லாவிடில் ஹெட்மாஸ்டரிடம் சொல்லி பேரையடிக்கச் சொல் வேன்' என்று பயமுறுத்தினார். முத்துஸ்வாமி என்ற பையன், ' நீங்கள் ஹெட்மாஸ்டரிடம் போய்ச் சொல்லுங்கள் சுவாமி. அதுதான் சரி. இல்லாவிடில் உண்மை வெளிப்படமாட்டாது' என்றான். ராமையா என்ற பையன் 'வாத்தியார் பள்ளிக்கூடத்தில் தூங்கி னது உண்மையா?' என்றான். 'நான் ஹெட்மாஸ்ட ரிடம் போகிறேன் பார்' என்று வாத்தியார் புறப் படவே, கிருஷ்ணஸ்வாமி 'நாங்கள் பார்த்தது போ தாது, எல்லாரும் பார்க்கவேண்டுமல்லவோ இந்த வேஷத்தை ! போங்கள், ஸார்' என்றான். லட்சு மணன் அங்கே போனால் வாத்தியாருக்குத்தான் அப் ராதம் விழும். மை கொட்டினபோது நீர் எங்கே