பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பதிப்பின் முன்னுரை. 'கமலாம்பாள் சரித்திரத்தின் மூன்றாம் பதிப்பு சில திருத்தங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது. லலிதாலயா' மைலாப்பூர், அக்டோபர், 1910. ஸி. வி. எஸ். நான்காம் பதிப்பின் முன்னுரை. மூன்றாம் பதிப்பு வெளியாகி 5 வருஷங்கள் ஆகின் றன. இப்புத்தகத்திற்கு ஏற்பட்டுள்ள தேவை மிகவும் அதிகமாகிவிட்டதாலும், இதை வாங்கிப்படிக்க விரும்பும் தமிழர்களின் அவாவை தீர்க்கும் பொருட்டும் இப்பதிப்பை பிரசுரிக்க முன் வந்தேன். பூமிக்குப் பாரமாகப் பலர் பிறந்து மடிகின்றனர். ஆனால் சிறந்த அறிவாளியால் எழுதப்பட்ட ஒரு நல்ல புஸ்தகம் இப்புவியின் மாபெரும் பொக்கிஷமாகக் கருதப் படும். ஆதலால் இப்புத்தகத்தின் கதை இந்நாட்டின் சமூக முன்னேற்றத்திற்கும், ஜீவன்கள் ஆத்மமோக்ஷமடைவதற் கும் கடவுள் முன்பாக சமர்ப்பிக்கிறேன். கிராம வாழ்க்கை மிக அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த நவீனம் கிராம முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருக்குமென் பது என் துணிபு.

  • லலிதாலயா' மைலாப்பூர்,

டிஸம்பர். 1915. I ஸி. வி. எஸ்.