78 கமலாம்பாள் சரித்திரம் மொட்டைத் தலையும், பொக்கை வாயுமாய் கையால் மார்பிலும் மண்டையிலும் மாறிமாறி யடித்துக் கொண்டு மண்ணை வாரித் தூற்றிக்கொண்டு சப்த -லோகங்களும் கிடுகிடு என்று நடுங்கச் செய்யத்தக்க பெருங்குரலுடன் 'ஐயோ!' என்று கதறிக்கொண்டு தாடகை போன்ற கரிய பெரிய உருவத்தையுடைய ஒரு கிழவி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு சுமார் 80 வயது இருக்கலாம். அவ்வூர் வம்பர் மகாசபையின் உத்தியோகஸ்தர்களில் அவள் ஒருத்தி. வம்பு, வழக்கு = விசாரணையில் கணக்கன், நாட்டாண்மைக்காரன் கூட அவளுக்கு நிகரில்லை. ஒரு காலத்தில் மழையில்லாது சிறுகுள முழு வதும் பயிர்கள் எல்லாம் விளையாமல் சாவியாப்போக அவ்வூர் குடிகள் தீர்வையைத் தள்ளிக் கொடுக்க வேண்டுமென்று சர்க்காருக்கு விண்ணப்பம் செய்து கொண்டார்கள். சாவி பார்க்க அனுப்பப்பட்ட தாசில் தார் அவர்கள் விண்ணப்பத்துக்கு விரோதமாக தீர் வையை வசூல் செய்யும்படி உத்தரவு செய்துவிட் டார். யார் என்ன மன்றாடியும் அவர் கேட்கவில்லை. இப்படியிருக்கையில் ஒரு நாள் அவர் மனைவி ஆற்றங் கரைக்கு வந்திருந்தபோது இந்தக் கிழவி அவளிடத் தில் போய் அவள் முகத்தைக் கடித்துவிடுவாள் போல் சமீபத்தில் சென்று கூர்ந்து பார்த்துக்கொண்டு, 'நீ யாரம்மா, இந்த தாசிலாய் வந்திருக்கிறானே அவன் பெண்டாட்டியா? ஊர் வாயிலெல்லாம் விழுந்திருக் கிறீர்களே. குஞ்சுங் குழந்தையுமாக க்ஷேமமாயிருக்க வேண்டும்!' என, அந்த அம்மாள் பயந்து தன் புருஷ னிடம் ஆற்றங்கரையில் நடந்த சங்கதியைச் சொல்லி நமக்கு ஏதோ சனியன் பிடித்திருக்கிறது. அவள் வாயில் நச்சுப்பல் நிச்சயமாயிருக்கிறது. இந்த ஊரா ருக்கு விரோதம் செய்யவேண்டாம்' என்று வேண்ட, அவரும் பயந்துபோய் தீர்வை முழுவதையும் தள்ளு