பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'பாப்பாபட்டியகத்து வெட்டரிவாள் 79 ஆம் அப் கோபசேய்யவேயாக அவல படி செய்ததுமன்றி அந்த ஊருக்கு ஒரு குளமும் வெட்டிக் கொடுத்துவிட்டுப் போனார். அந்த ஊருக்கு இவ்வளவு பெரிய உபகாரம் செய்த கிழவியின் பெயர் குப்பிப்பாட்டி. அவளுக்கு 'பாப்பாபட்டியகத்து வெட்டரிவாள்' என்று பட்டப்பெயர். ஏனெனில் சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னே தன் அயல் வீடாகிய பாப்பாபட்டி சங்கரய்யர் அகத்துக் கொல் லையில் போடப்பட்டிருந்த ஒரு விறகு கட்டையை அவள் இராத்திரியில் திருடி விட்டு மறுநாட் காலையில் அந்த விறகை வெட்ட அரிவாளுக்கு அவர்கள் வீட் டிற்கே போனாள். அவள் திருட்டு வெளியாய் விட் டது. ஆதலால் அது முதல் அவளுக்கு ' பாப்பாபட் டியகத்து வெட்டரிவாள்' என்று பட்டப்பெயர் ஏற் பட்டது. அவள் தெருவழியே போகும் போதெல்லாம் அவ்வூர்ப் பிள்ளைகள் (சில சமயங்களில் பெரியவர்கள் கூட) அப்பெயர் வைத்துக் கூப்பிட அவளுக்கு அசாத் தியமாய்க் கோபமுண்டாய் அவள் ஏகமாய்த் திட்டு வாள். அப்படிச் செய்யவே பையன்களுக்கு இன்னும் அதிக உற்சாகம். கடைசியாக அப்படிக் கூப்பிடப் படுவதிலும் கோபிப்பதிலும் அவளுக்கே உற்சாக முண்டாய்விட்டது. பொழுது போகாவிட்டால் அவள் வீதி வழிவந்து சும்மா இருப்பவனைப் பார்த்து ' நீ நல்லவன் ஒன்றும் சொல்லமாட்டாய்' என்பாள். அவள் எதிரே ' ஆமாம் பாட்டி' என்று சொல்லி விட்டு, அவள் கொஞ்சது ரம் போனவுடனே 'பாப்பா பட்டி வெட்டரிவாள்' என்று உரக்கக் கூப்பிட்டு விட்டு ஓடிப்போய்விடுவான். இவளோ, 'ஏனடா கட்டையிலே போவாய்' என்று தன்னுடைய ராம பாணத்தைத் தொடுத்துவிடுவாள். கேலிக்காரப் பிள்ளைகள் அவளைப் பார்த்து ' நான் என்றைக்காவது உன்னை "பாப்பாபட்டியகத்து வெட்டரிவாள்" என்று சொல்லியிருக்கிறேனா பாட்டி' என்றும், ' பாட்டி அவன் உன்னை சும்மா சும்மா பாப்பா பட்டியகத்து இயமா அப்சாககோபி