உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



84 கமலாம்பாள் சரித்திரம் யில் வேஷ்டி.கூடச் செவ்வையாய் உடுத்தத் தெரியாத பையன் இன்று பாராட்டிக்கொண்ட பெருமையைப் பாருங்கள்! ஒருவேளை நாமும் நம்முடைய கல்யாணத் தில் இப்படித்தான் இருந்திருப்போம். மேலும் ஸ்ரீநி வாசன் குழந்தைதானே! மகாகனம் பொருந்திய மகா--- -ஸ்ரீ ஸ்ரீநிவாஸ அய்யர் அவர்கள் தமது ஆசனத்தில் இவ்வாறு வீற்றி ருக்க, குழந்தை லட்சுமி உடல் ஒடுங்கி தலைகுனிந்து அவரிடமிருந்து ஒரு முழத்துக்கப்பால் தங்கத்தில் வார்த்த பிரதிமைபோல் அசைவற்று அமர்ந்திருந் தாள். அவள் அகமுடையானை அவள் இன்னும் செவ் வையாய்ப் பார்க்கவில்லை. அவள் சபைக்கு வரும் போது ஸ்ரீநிவாசன் உட்கார்ந்தது ஏதோ ஒரு ஜோதி போல் அவளுக்குத் தோன்றியதைத் தவிர அவனு டைய உருவத்தையும் முகத்தையும் அவள் இன்னும் சரியாய்ப் பார்க்கவில்லை. ஒருவருமறியாமல் கடைக் கண்ணால் அவனைக் கொஞ்சம் பார்த்துவிட இவுடந் தான். ஆனால் எல்லாரும் தன்னை கவனித்துக்கொண் டிருந்ததாக அவளுக்குத் தோன்றியதால், அவள் அப் படிச் செய்யக்கூடக் கூசினாள். ஸ்ரீநிவாசனாவது இவ ளைப் பார்த்தானா! அதுவுமில்லை. அவனுக்கு ஸ்திரீ களைக்காட்டிலும் பத்துப் பங்கு அதிக நாணம். அவ ளைப் பார்க்க அவனுக்கு ஆசை பூரணமாயிருந்தது. ஆனால் நீக்கமுடியாத கூச்சம் குறுக்கிட்டது. இவர்கள் நிலைமை இப்படியிருக்க தாடகை குப்பியின் கூக்குரல் கேட்டது. உடனே ராமண்ணா வாத்தியாரையும் மற் றும் சிலரையும் தவிர எல்லாரும் வெளியே போய்விட் டார்கள். ராமண்ணாவாத்தியாரும் வாசல் வரையில் போய்க் கூக்குரலின் காரணத்தையறிந்து - ' இந்த கெட்ட முண்டைக்கு சாங்காலம் வரவில்லையே! முண் டையை கண்டம் கண்டமாக வெட்டி விட்டால் தான் என்ன ,' என்று முணுமுணுத்துக்கொண்டு திரும்பி