பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'பரஸ்பர தரிசனம் ஆனந்த வெள்ளம் ' 85 IT விட்டார். குழந்தை லட்சுமியோ திடீரென்று உண் டான சப்தத்தைக் கேட்டு வேடர்களுடைய கொம்பு வாத்தியத்தைக்கேட்ட மான் போலத் திடுக்கிட்டு நடுங் கினாள். இதற்குள் ஸ்ரீநிவாசன் நடக்கும் சங்கதியை யறிந்துவர சுப்பராயனை யனுப்பி விட்டு வாத்தியா ரைப் பார்த்து கம்பீரமாய், 'தாத்தா, அங்கே என்ன விசேஷம்' என்று கேட்டுவிட்டு, 'இந்த அற்பவிஷயந் தவிர வேறொன்றுமில்லையே' என்று வெகு இலக்கண மாய் மறுமொழி சொன்னான். வாத்தியார் மறுமொழி யைக் கேட்ட லட்சுமி மனந்தெளிந்து கூட்டம் நீங்கி னதை ஒரு பெரிய பாரம் நீங்கினதுபோல் உணர்ந்து பெருமூச்செறிந்து தன் தலையைக் கோதுபவள் போல சற்று நிமிர்ந்தாள். ஸ்ரீநிவாசன் கூட்டம் திரும்புமுன் தன் மனைவியை எப்படியாவது பார்த்துவிட வேண்டு மென்ற ஆசையுடன் தூணைப் பார்ப்பவன் போலவும், சுவரைப் பார்ப்பவன் போலவும், விட்டங்களைப் பார்ப் பவன் போலவும் கொஞ்சம் கொஞ்சமாய் லட்சுமி யைப் பார்க்கத் துணிந்தான். இப்படி இவன் கள்ளத் தனமாகப் பார்க்கும்போது, தலையைக் கோதுவது போல் பாவனை பண்ணிக்கொண்டு இவனுடைய அழகை ஜாடையாய்க் கண்டு அடங்காத ஆநந்தத் துடன் மிருதுவாக மந்தகாசம் செய்து கொண்டு தன் கண்களை இவனுடைய அழகான மேனியினின்றும் பறிக்கமாட்டாமல் லட்சுமி பார்த்துக்கொண்டிருக்கத் தற்செயலாய் இவ்விருவர் கண்களும் ஒரு இமைப் பொழுது சந்தித்தன. அப்படிச் சந்தித்த உடனே லட் சுமி தலை குனிந்து விட்டாள். அவள் முகம் வியர்த்தது; கைகால் பதறின ; உடல் மயிர்க்கூச்செறிந்தது. காலை யில் இளஞ்சூரியனைப் பார்த்த கண்களுக்கு எப்படிச் சற்று நேரத்திற்கு எங்கே பார்த்தாலும் சூரியனாகத் தோன்றுமோ அதுபோல லட்சுமியின் கண்களுக்கு கொஞ்சநேரத்திற்குத் தன் புருஷனுடைய செந்தா மரை போல் மலர்ந்த முகமும் அழகிய கம்பீரமான