பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

________________

கம்பனும் பாரதியும் அறிவுசான்ற அவைத்தலைவர் அவர்களே! கம்பனின் அன்பர்களே ! சகோதர, சகோ தரிகளே ! இன்று எனக்கு பேச ' கம்பனும்-பாரதியும்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியும். எல்லாப் பேச்சாளர்களையும்விட இந்த விழாவில், உங்கள் தலையசைப்பைப் பெற எனக்குத்தான் அதிகக் கஷ்டம். எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள்தான் இதற்குக் காரணம். ஏன்? கம்பனைப் பற்றி நீங்கள் பதினேழு ஆண்டுகளுக்கு மேலாக அறிமுகம் ஆனவர்கள். இந்த பதினேழு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும்,கம்பனை நன்றாகச் சுவைத்தறிந்த தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் பலர், அவரவர் கோணத்திலிருந்து, தங்க ளுக்கு ஏற்ற இசைவான முறையில் கம்ப விருந்து நடத்த, அதை மனம் நிறைய அனுபவித்துக் களிக்க பேறும் வாய்ப்பும், தமிழகத் தின் இதர பகுதி மக்கள் பொறாமைப்படத்தக்க விதத்தில் நீங்கள் பெற்று வந்திருக்கிறீர்கள். அத்தகைய வாய்ப்புப் பெற்ற உங்க ளிடையில் கம்பனைப் பற்றிப் பேசி, தலையசைப்பையும் கைதட்டலை யும் பெறுவது எளிதான காரியமா? அதுபோலத்தான் பாரதியைப் பற்றியும். பாரதி தமிழகத்திற்கு மற்றெல்லாப் புலவர்களையும்விட நன்கு அறிமுகமான பெரும் புலவன். உங்களுக்கும் மிக நன்றாக அறிமுகமான புலவர் பெருமான். பாரதியைப் பற்றி உங்களிடை யில் பேசி,'ஆஹா' என்ற பாராட்டுதலைப் பெறுவதும் அத்தனை சுலபமான காரியமா? உங்களுக்கு நிரம்பப் பழக்கமான இரண்டு தமிழ் மகா கவிகளைப் பற்றி, உங்களுக்குப் புத்தம் புதுமையான செய்திகளை என்னால் சொல்லமுடியாவிட்டால், சொல்லும் வகை யில் புதுமைபடச் சொல்லமுடியா விட்டால், உங்களுடைய தலையசைப்பை நான் எவ்வாறு பெறமுடியும்?