பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

________________

6 முதலில் பாரதியை எடுத்துக்கொள்ளலாம். அப்பால் பாரதி யின் வழி கம்பனுக்குப் போகலாம். பாரதி ஜனநாயகக் கவி; நாம் வாழ்கிற, நாம் அனுபவிக் கிற புதிய சூழ்நிலையில் உருவாகிய கவி. நமக்கு இதர எல்லாக் கவிகளையும் விட புரிய, தெரிய கவிமழை பொழிந்த கவி. இருப தாம் நூற்றாண்டையக் கவி. தமிழ்க் கவிகளிலேயே நவீனக் கண்ணோட்டம் படைத்த கவி. • நமக்கு தேசபக்தியை, சுதந்திர தாகத்தை, புதிய வாழ்வு நாட்டத்தை, போதித்த கவி. நமக்கு உயிருக்குயிரான இனிமை மிக்க கவி. பெரியவர்களுக்கு, என்று 68 ஊருக்கு நல்லது சொல்வேன். எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் சீருக்கெல்லாம் முதலாகும்-ஒரு தெய்வம் துணை செய்யவேணும் ” ஆரம்பித்து, சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் உலக முழுவதிலும் மேலும் மேலும் ஆதிக்கம் செலுத்திவரும் நவீன உண்மைகளான, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முதலிய உண்மைகளை, நமக்கு, நமது நாட்டு யதார்த்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி, போதித்த கவி பாரதி. தம்பிக்கு 'புதிய ஆத்திசூடி' வடித்து, அதில், அச்சந் தவிர் தெய்வம் நீ என்றுணர் வையத்தலைமை கொள் என்று அறிவுரை தந்த கவி பாரதி. பாப்பாவுக்கு, உயிர்களிடத்தில் அன்பு வேணும்-தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும் வயிரமுடைய நெஞ்சு வேணும்- இது வாழு முறைமையடி பாப்பா ” என்று பாடி பாப்பாவை ஆடவைத்த கவி பாரதி.