பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

________________

7 தமிழன் வாழ்வை, மனிதன் வாழ்வை புதிய பார்வையோடு பார்த்த பாரதி, நவீன விமர்சனக் கண் படைத்த பாரதி-கம்பனை எப்படி நிர்ணயிக்கிறான் என்பதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். பாரதி தமிழில் எத்துணை, ஈடுபாடு உடையவனோ அத்துணை ஈடுபாடு உடையவன், கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகிய முப்பெரும் தமிழ்ப் புலவர்களிடத்திலும். எங்கெங்கே பெருமை படத் தமிழ்ப் புலவர்களைக் குறிப்பிடுகிறானோ, அங்கங்கே இந்த முப்பெரும் புலவர்களை பாரதி இணைத்துக் குறிப்பிடுவதை பாரதி இலக்கியத்தில் பரக்கக் காணலாம். கல்வியில் பெரியவன் கம்பன் செந்தமிழ் நாட்டை நினைந்து பாரதி செம்மாந்து பாடுகிறான் அல்லவா? அந்த "செந்தமிழ் நாடெனும் போதினிலே " என்ற பாட்டில், பாரதி கம்பனின் தன்மையையும் தரத்தையும் வரை யறுத்துக் காட்டுவதைப் பாருங்கள்! கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு இந்த இரண்டு வரிகளில் கம்பனைப்பற்றிய பாரதியின் ஒரு வரையறுப்பு காணக்கிடக்கிறது. இங்கு, "கல்வியில் பெரியவன் கம்பன்" என்று பாரதி முழு மூச்சோடு நிர்ணயிக்கிறான். "புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு '; ஆகவே 'கல்வி சிறந்த தமிழ் நாடு என்று தீர்த்துச் சொல்கிறான். "பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ் நாடு' தான். ஆயினும் 'புகழ்க் கம்பன் பிறந்ததால்' 'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று கணிக் கிறான். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான்புகழ் கொண்டது'தான் தமிழ்நாடு; அதுபோல் 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்-மணி ஆரம்படைத்தது' தான் தமிழ்நாடு, ஆயினும் புகழ்க், கம்பன் பிறந்த தமிழ் நாடு' சிறந்த தமிழ்நாடு " என்றே பாரதி நிர்ணயிக்கிறான். 65 எனவே "கல்வி பவணந்தி முனிவரின் 'நன்னூலி' லிருந்து, கா. நமசிவாய முதலியாரின் 'சிற்றிலக்கண வினா விடை' வரையில், இலக்கண