பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

________________

8 நூல்களிலெல்லாம், ஐந்தாம் வேற்றுமை உருபான 'இல்' என் பதை வாக்கியத்தில் பொருத்திக் காட்ட 'கல்வியில் பெரியவன் கம்பன்' என்ற வாக்கியத்தையே மேற்கோள் காட்டுகிறார்கள். ஐந்தாவது, ஆறாவது வகுப்புப் படித்த மாணவ, மாணவிகளுக்குக் கூட இந்த உண்மை நன்றாகத் தெரியும். இன்று வரையில் 'கல்வியில் பெரியவன் கம்பன்' அல்ல என்று யாரும் மறுக்கத் துணியவும் இல்லை. கம்பன் தமிழகத்தில் தோன்றிய பிறகு 'கல்வியில் பெரியவன் கம்பன்'தான். பாரதியின் நிர்ணயிப்பும் இதுதான். எனினும் எனது பேச்சுக்கு இந்த நிர்ணயிப்பு முக்யமல்ல. கம்பனுக்கே முதலிடம் பாரதியின் கம்பனைப்பற்றிய மற்றொரு நிர்ணயிப்பு என்ன? "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை " என்பது. பாரதி, தமிழைப் பற்றிப் பாட, ஆவேசம் கடல்மடை திறந்து பாய்ந்தபொழுது, தமிழைப்போல் இனிய மொழி உலகில் வேறு இல்லை என்று பாடுகிறான்; தமிழ்ப் புலவர்களான கம்பனைப் போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் உலகத்தில் எங் கும் பிறந்ததில்லை என்று பாடுகிறான். இது உண்மையென்றும் உறுதி கூறுகிறான். பன்மொழிப் புலமை வாய்ந்த பாரதி, உலக மகாகவிகளைக் கற்றறிந்து, ஒப்பு நோக்கியே மேற்படி முப்பெரும் புலவர்களை முதல்வரிசையில் வைக்கிறான். காலத்தால் வள்ளுவ னும், இளங்கோவும் கம்பனுக்கு முந்தியவர்களேனும், பாரதி வரிசைப்படுத்தும்பொழுது, கம்பனை முதல்வரிசையில் முதலில் வைத்தே பாடுகிறான். பாடவேண்டுமென்று விரும்பினால் வள்ளு வனையோ இளங்கோவையோ முதலில் வைத்து பாரதிக்கு பாடமுடியாதா, என்ன? முடியும். பின் ஏன் கம்பனை முதலில் வைத்துப் பாடுகிறான் ? கம்பன்தான் உலகப் பெரும் புலவர்கள்