பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

________________

9 யாவரினும் பெரும்புலவன் என்பது அவன் மதிப்பீடு. நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பது வேறு விஷயம். பாரதியின் அழுத்தந்திருத்தமான நிர்ணயிப்பு, கம்பனுக்கே கொடுக்கிறது என்று நான் பார்க்கிறேன். "கன்னனெடு கொடைபோயிற்று; உயர்கம்ப நாடனுடன் கவிதை போயிற்று; உன்னரிய புகழ்ப்பார்த்த நெடுவீரம் 99 அகன்றதென உரைப்பர் ஆன்றோர் " முதலிடம் என்று பாரதி பிறிதோரிடத்தில் பாடுவதும், கவிதை உலகில் கம்பனுக்குத்தான் முதலிடம் அளிக்கிறான் என்பதையே தெளிவு படுத்துகிறது. கம்பன் தன்னேரிலாத புலவன் என்பது பாரதியின் வரை யறுப்பு.எனினும் இதுவும் எனது பேச்சுக்கு முக்யம் அல்ல. எல்லையற்றதை எட்டிப் பிடிப்பவன் கம்பனைப்பற்றிய பாரதியின் இன்னொரு வரையறுப்பைக் கேளுங்கள்! "விதியே தமிழச்சாதியை என்செயப் படைத்தாய் ?" என்றொரு அகவற்பா பாரதி பாடியிருக்கிறான். "தமிழச்சாதி" என்ற தலைப்பில் இப்பொழுது அந்த அகவற்பா வெளியிடப்பட்டிருக் கிறது. அதில் நமது முப்பெரும் புலவர் மணிகளைப்பற்றியும், அவர்களுடைய படையல்களைப்பற்றியும், பாரதி பின்வருமாறு விதந்தோதியிருக்கிறான்: 66 சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும், 'எல்லையொன் றின்மை'எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதிகொண்டிருந்தேன்."