பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

________________

$ 10 இங்கு பாரதி கம்பனை எடைபோட முயலும் அதிசய முயற்சி யைப் பாருங்கள்! எல்லையொன் றின்மை எனும் பொருளை, கம்பன் குறிகளால் காட்டிட முயலும் அசகாய சூர, அசுர, அற்புத முயற்சியைச் சுட்டிக்காட்டுகிறான். இந்த கம்ப முயற்சியின் நிகரற்ற சிறப்பைப்பற்றிய பாரதியின் நிர்ணயிப்பை நீங்களே ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து முடிவுகட்டுங்கள் என விட்டுவிடு கிறேன். இந்த நிர்ணயிப்பும் எனது பேச்சுக்கு முக்யமல்ல. கம்பனைப் பற்றிய பாரதியின் வேறொரு நிர்ணயிப்பைக் கவ னிப்போம். பாரதி, தனது சுயசரிதையைப் பாடும்பொழுது பின்வரும் சில அடிகளைப் பாடுகிறான்: கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும், சேரன்தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வவள்ளுவன் வான்மறை தந்ததும் ” அன்ன யாவும் அறிந்திலர். இங்கு சேரன் தம்பியான இளங்கோவின் சிலப்பதிகாரம் பெருமையைச் சுட்டிக் காட்டுகிறான். தெய்வ வள்ளுவனின் திருக்குறள் மகிமையை எடுத்துரைக்கிறான். ஆனால் கம்பனின் இராம காதையைக் குறிப்பிட்டு, கம்பனுடைய கவிதா விலாசத்தை. மேம்படுத்தவில்லை. கவிதைப் பெருமையைச் சொல்லும்பொழுது, 'காளிதாசன் கவிதை புனைந்ததும்" என்றே சொல்கிறான். காளிதாசன் கவிதைகளில் பாரதி மிகவும் ஈடுபாடுடையவன் என் பது நமக்குத் தெரியும். "தெய்வீகச் சாகுந்தலம் எனும் நாடகம் செய்தது எவர்கவிதை-அயன் செய்வதனைத்தின் குறிப்புணர் பாரத தேவி அருட்கவிதை " என்று வேறோரிடத்தில் பாடி, தனக்கு காளிதாசனின் நாடகங்களி லும் கவிதை வளத்திலும் எவ்வளவு ஈடுபாடு உண்டு என்பதைக்