பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

________________

C 11 காட்டுகிறான். ஆகவே, அவன் காளிதாசன் கவிதையைப் புகழ்ந் ததில் ஆச்சரியமில்லை. ஆனால்,எங்கும் வள்ளுவனோடும் இளங் கோவோடும் கம்பனை தமிழ்ப் புலமையில் ஒரு வரிசைப்படுத்திக் காட்டியிருக்கிற பாரதி, இங்கு அவ்வாறு வரிசைப்படுத்தாததும், கம்பனோடு கவிதை போயிற்று' என்று பாடிய பாரதி இங்கு காளிதாசன் கவிதையோடு கம்பன் கவிதையையும் இணைத்து வரிசைப்படுத்தாததும் உண்மையில் நமக்கு ஆச்சரியத்தை அளிக் கும். ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அளவளாவ கம்பனை எவ் வாறு புகழ்கிறான் தெரியுமா ? "கம்பன் என்றெரு மானிடன்" என்று புகழ்கிறான்.ஆம் மானிடனாகப் பிறந்த ஒருவனுக்கு 'ஒரு மானிடன்' என்ற புகழைவிடப் பெரும்புகழ் வேறில்லை அல்லவா? 8 கம்பன் ஓர் மானிடன் பாரதியின் வரையறுப்பில் கம்பன் கவிச்சக்கரவர்த்தி - கம்பன் ஒரு மானிடன் (Kamban the greatest poet and the man). ஆனால், 'கம்பன் ஒரு மானிடன்' என்ற வரையறுப்பைத்தான் நான் எனது பேச்சுக்கு மிக முக்கியமான வரையறுப்பாக எடுத்துக் கொள்கிறேன். கிரேக்க நாட்டில் ஒரு ஞானி, பண்டு, பட்டப்பகலில் கையில் ஒரு விளக்கைப் பிடித்துக்கொண்டு, ஏதன்ஸ் நகரின் நடுத்தெருக் களில், "ஒரு மனிதன் தேவை" (Wanted a man) என்று அலைந்து திரிந்தான். நமது பாரதியோ கம்பனில் ஒரு மானிடனை 'க் கண்டான். ( பாரதி, கம்பனை, கவிச்சக்கரவர்த்திகளில் முதல்வன் என்று அழைத்ததற்கும் மேலாக 'ஒரு மானிடன்' என்று ஏன் பாராட்டு கிறான்? 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பதுபோல், மகாகவி யாகிய கம்பனுடைய மகா காவியத்தில் முங்கி மூழ்கிய மகாகவி யாகிய பாரதி, கம்ப காவியம், 'பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற மானிடமயமாகப் பொங்கி வழிவதைக் காண்கிறான். கம்ப சித்தி ரங்கள் 'மானிடத்தை' ஆழமாகவும், விரிவாகவும், நுட்பமாகவும், அழகெனும் அழகும் ஓர் அழகு பெற'ச் சித்தரித்துக் காட்டு வதைப் பார்க்கிறான் கம்பன் ஓர் மானிடன்' என்று நிர்ண யித்து, அந்த நிர்ணயிப்பை உலகறிய முழக்குகிறான்.