பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

________________

12 கடந்த ஆயிரம் ஆண்டுகளில் கம்பனைப்பற்றி யாரும் நிர்ண யிக்காத, 'கம்பன் -ஓர் மானிடன்' என்ற புதிய நிர்ணயிப்புக்கு பாரதி வருகிறானல்லவா? ஏன் இவ்வாறு நிர்ணயிக்கிறான்? இதை யறிய, பாரதியின் வாழ்க்கைக் கண்ணோட்டம் என்ன என்பதை ஊன்றிக் கவனித் துத் தெரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு தெரிந்துகொள்ள, பாரதி இலக்கிய முழுவதிலும் தேசீயப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், இதர இலக்கியங்கள் முழுவதி லும் சில சொற்கள் அடிக்கடி பயிலப்படுகின்றன. அவை, எந்த இடத்தில் என்ன பொருளில் வழங்கப்படுகின்றன என்பதைக் கண்டுபிடிக்க முயலவேண்டும். 'கிருதயுகம்', 'அமர நிலை', 'இங்கு' ஆகிய சொற்கள் பல விடங்களிலும் பயிலப்படுவதை ஊன்றி நோக்கி, 'அவற்றின் கருத்துக்களைப் பொருத்தி'ப் பார்ப்போமானால்,பாரதியின் தத்துவ தரிசனத்தை - வாழ்க்கைக் என்று நான் கருதுகிறேன். கண்ணோட்டத்தைக் இவ்வுலகிலேயே நல்வாழ்வு காணமுடியும் முதன் முதலில் 'இங்கு' என்ற சொல்லை எடுத்துக்கொள் வோம்: 'இங்கு ' என்ற சொல்லை, 'இந்த உலகத்தில்' 'இந்த ஜன்மத்தில்' 'இம்மையில்' என்ற பொருள்பட பாரதி எவ்வாறு உபயோகப்படுத்துகிறான் என்பதை உன்னித்து நோக்குங்கள். 'தமிழ்' என்ற பாட்டில்: "தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்புக் கண்டார்" என்று பாடுகிறான். 'வேண்டும்' என்ற கவிதையில், என்கிறான். "மண் பயனுற வேண்டும் வானகம் இங்குத் தென்பட வேண்டும்