பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

________________

13 அறிவே தெய்வம்' என்ற பாட்டில், 4 கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு எனக் காட்டும் மறைக ளெல்லாம் " என்று பாடுகிறான். 'ஜீவன் முக்தி' என்ற பாட்டில், 46 ஜயமுண்டு பயமில்லை மனமே - இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு * என்று பாடுகிறான். 'சொர்க்கமோ' 鲨 'மோட்சமோ', 'கைலாசமோ, வைகுண் டமோ' இந்த வாழ்நாளில், இந்த உலகத்தில், கண்கூடாக அனுபவ சாத்தியமாகக் கிடைக்கப் பெறவேண்டும் என்பது பாரதி யின் அசைக்க முடியாத கோரிக்கை. ஆகவே, கற்பனையில் எங்கோ இயங்குகிற 'வானகம்' இங்கு முளைக்கவேண்டும் என்று வேண்டுகிறான். கவலையற்று இந்நில உலகில் வாழ்வதுதான் 'மோட்சம்' என்று வேத சாட்சியாகக் கூறுகிறான். இந்த ஜன் மத்தில் விடுதலையும், நிலையான வாழ்வும் உண்டு என்ற முற்ற முடிந்த முழு நம்பிக்கையை அள்ளி வீசுகிறான். இதுமட்டுமல்ல. இந்த வாழ்வுக்கு அப்பால் 'மறுமை'யில் நம்பிக்கை வைப்பதையும் வேரோடு பிடுங்கி எறிகிறான். செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்று எண்ணி யிருப்பார் பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று ஊதேடா சங்கம் செத்த பிறகு நம்பிக்கை வைக்கும் மனிதரை பித்தர் என்றும் அவர் பேசும் சாத்திரம் பேயுரை என்றும், கண்டனக்கணை பாய்ச்சு கிறான். இதைவிட மறு உலக நம்பிக்கையை, மறு பிறப்பு எண் ணத்தைத் தாக்கித் தகர்ப்பது எப்படி? நீங்கள் உடன்படுகிறீர் களோ, முரண்படுகிறீர்களோ, பாரதியின் ஐயந்திரிபுக்கு இடமற்ற கருத்து இது.