பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

________________

14 செத்த பிறகு எந்த வாழ்வும் இல்லை என்கிறான். இங்கேயே வானக' வாழ்வு வேண்டும் என்கிறான். சான்றோர்களின் லட்சிய வாழ்வான முழுநிறை இன்ப நல்வாழ்வு இந்தப் பிறப்பிலேயே மனித வர்க்கம் முழுமைக்கும் கைகூட வேண்டும் என்பதுதான் பாரதியின் தனி விருப்பம். சமதர்ம அமர நிலை இரண்டாவதாக அமர நிலை' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். உயர் மனிதன், அப்பழுக்கற்ற, பண்பட்ட மனிதன், வாழ்வாங்கு வாழும் மனிதன், மானிடம் கைவந்த மனிதன் - இத் தகைய மனிதனின் தரத்தை அமரநிலை என்று அழைக்கிறான் யாரதி. அங்கங்கே இக்கருத்தை அவன் வெளியிடும் விந்தையைப் பாருங்கள். விநாயகர் நான்மணி மாலை' என்ற நூலில், "விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் துச்சமென் றெண்ணத் துயரிலா திங்கு நிச்சலும் வாழ்ந்துநிலை பெற்றோங்கலாம்; அச்சம்தீரும்; அமுதம் விளையும்; வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்; அமரத்தன்மை எய்தவும் 1 இங்குநாம் பெறலாம்; இஃதுணர்வீரே !” என்று பாடுகிறான்; கண்ணன் திருவடி" என்ற பாட்டில், இங்கே அமரர் சங்கம் தோன்றும் மங்கும் தீமை பொங்கும் நலமே " என்று பாடுகிறான்.