பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

________________

15

  • முப்பதுகோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை '

என்று பாடுகிறானே 'பாரத சமுதாயப் பாட்டு', அந்தப் பாட்டில் 66 ல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்- ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் " என்று பாடும்பொழுது, 'அமர நிலை'க்கு அர்த்தமென்ன என்று ஆழ்ந்து சிந்தியுங்கள். "எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓனம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்- நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் ” C எனப் பெருமிதத்தோடு பாடுகிறானே, அந்த நிலையைத் தானா, அந்த சமதர்ம ஜனநாயக நிலையைத்தான அமர நிலை' என்கி றான்? அந்த 'அமர நிலை'யைத்தானா இந்தியா உலகிற்கு அளிக் கும் என்கிறான் என்பதையும் தீர்க்கமாகச் சிந்தித்துப் பாருங்கள்! பாரதி காணும் கிருதயுகம் மூன்றாவதாக 'கிருதயுகம்' என்ற சொல்லை எடுத்துக்கொள் வோம். மானிட வர்க்கத்தின் லட்சிய வாழ்க்கையை, புதிய சமு தாய வாழ்க்கையை, கிருதயுகம்' என்ற சொல்லால் பாரதி அழைக்கிறான் என்று, அவனுடைய இந்த சொற்பிரயோகத்தை பரக்கப் படிக்கும்பொழுது எனக்குப் படுகிறது. பாரதி 'கிருத யுகம்' என்ற சொல்லைப் பல இடங்களில் உபயோகித்திருக்கிறான். 'அமர யுகம்', 'சத்யயுகம்' என்ற சொற்களையும் அதே பொரு ளில் இரண்டொரு இடங்களில் உபயோகித்திருக்கிறான். அவன் கிருத யுகம் ' என்ற சொல்லை எந்தப் பொருளில் உபயோகித்தி