பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

________________

16 ருக்கிறான் என்பதற்கு ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளைத் தருகி றேன். விநாயகர் நான்மணி மாலை'யில் ஓரிடத்தில், 66 பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண்முன்னே மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வவிதி இஃதே' என்று கூறுகிறான். மற்றோரிடத்தில், “ நல்லகுணங்களே நம்மிடை அமரர் பதங்களாம், கண்டீர், பாரிடை மக்களே ! கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம்நான் கொண்டனன் என்று பாடுகிறான். இங்கே பாரதி மனித குலத்தை, கலியுகம் முடியும்வரைக் காத் ருக்கச் சொல்லவில்லை. கிருதயுகம் மலரும்வரைப் பொறுத் ருக்கச் சொல்லவில்லை. பொய்வாழ்வை, போலி வாழ்வை ஆதா ரமாகக் கொண்ட கலியுகத்தை ஒழித்துக் கட்டி, மானிடத்தின் வெற்றியான கிருதயுகத்தினை, 'பூலோகத்தார் கண்முன்னே' நிலைநாட்டுவேன் என்று உறுதி கூறுகிறான். இது, தான் கேட்டு வந்த வரம் என்கிறான். தனது குறிக்கோள் என்கிறான். 6 ஜார் வீழ்ச்சி' என்ற பாட்டில், 15 இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான் கிருதயுகம் எழுகமாதோ" என்று பாடுகிறான். இங்கே ஜாரின் வீழ்ச்சியை கலியுகத்தின் வீழ்ச்சியாகவும் சோவியத் மலர்ச்சியை கிருதயுகத்தின் எழுச்சியாகவும் பாரதி பார்க்கிறான். பழைய பஞ்சாங்கப்படி, கலியுகம் மறைய, கிருதயுகம் பிறக்க பாரதி காத்திருக்க வில்லை. இப்பொழுது நீங்கள் உணரமுடியும், நான் பாரதியின் வாழ்க் கைக் கண்ணோட்டத்தை எவ்வாறு பார்க்கிறேன் என்பதை. மனி