பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

________________

17 தர்கள் ' இங்கு ' ' அமர நிலை' எய்தும் 'கிருத யுகம் ' பாரதியின் வாழ்க்கைக் கண்ணோட்டம், மானிடம் நிறைந்த ஓர் புத்தம்புதிய சமுதாயம் பாரதியின் வாழ்க்கைக் கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தோடு பாரதி கம்பனைப் பார்க்கிறான்.. கம்பன்-ஓர் மானிடன்' என்று நிர்ணயிக்கிறான். மகா கவி யார் ? தன் கால வாழ்வின் இனிமையை இன்னும் பெருக்குகிற வனும், தன்கால நாகரீகத்தை இன்னும் உயர்த்துகிறவனுமே மகாகவி என்ற பேருக்குத் தகுதியுடையவன் என்று இந்தியாவின் தலைசிறந்த தத்துவ ஞானியும், இந்தியக் குடிஅரசின் உதவி ஜனாதிபதியுமாகிய டாக்டர் இராதாகிருஷ்ணன் தாம் எழுதிய இந்தியப் பெரியார்கள்" என்ற நூலில் ரவீந்திரநாத தாகூ ரைப் பற்றி எழுதும்பொழுது குறிப்பிடுகிறார். அதோடு மட்டு மல்ல; அப்பெரியார், தாகூர் இலக்கியத்தில் விரவிக் கிடக்கும் முக்கியமான மூன்று அம்சங்களையும் சுட்டிக்காட்டுகிறார். அவை: (1) உள் வாழ்வின் நேர்மை, உள் வாழ்வின் பயிற்சி ஆகிய வற்றின் விளைவாக ஏற்படும் ஆத்மீக மதிப்பீடுகளின் இறுதித் தன்மை ; (2) வாழ்வை மறுப்பது அல்லது துறப்பது ஆகியவற் றின் கையாலாகாத் தன்மை--வாழ்வின் தூய அல்லது முழு வளர்ச்சியின் அவசியம். (3) கடைப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர் உள்ளிட்ட எல்லோரிடமும் நேரடியாக அன்பும் அருளும் காட்டும் மனப்பான்மை. இந்த மனித வாழ்வின் சீரிய அம்சங்களை, பாரதியிடம் பரக்கக் காணலாம்; கம்பனிடம் கைதேர்ந்த விதத்தில் அவன் அருளிய மானிட மகா காவியம் முழுவதிலும் பார்க்கலாம். உண்மையான கவிதையில் கவிஞனின் இதயம் மலர் கிறது; கற்பனை மலர்கிறது; மொழிவளம் மலர்கிறது; மானிட ஆர்வம் மலர்கிறது; உணர்ச்சி மலர்கிறது; சிந்தனை மலர்ந்து சிறகடித்துப் பாய்ந்து செல்கிறது" என்று ஆங்கில இலக்கிய ஆராய்ச்சி மன்னனாகிய கோலரிட்ஜ், ஷேக்ஸ்பியரைப்பற்றிக்