பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

________________

18 கூறும்பொழுது கூறுகிறான். இவை இத்தனையும் இதற்கப்பாலும் நாம் கம்பன் கலைக் கோவிலில் கவிதை நடனத்தில் கண் களிக்கலாம். 46 பேராற்றலும் பெருந்திறனும் மட்டும் ஒருவனைக் கலைஞ னாக்கிவிடாது; அவன் படையலின் பின் ஒரு மனிதன் காட்சியளித் தாக வேண்டும்" என்று அமெரிக்க ஞானியான எமர்சன், கத்தே என்ற ஜர்மன் மகாகவியைப்பற்றிக் கூறும்பொழுது குறிப்பிட்டுச் சொல்கிறான். கம்ப சித்திரங்கள் முழுவதிலும், எமர்சன் குறிப்பிடும் 'மனிதன்' பின்னணியில் நின்று காட்சியளிப்பதைக் காணலாம். "செத்ததன்மை முழுவதையும் விழி நெருப்பு உமிழ வெறுத்துக் தள்ளு ; வா ழ்வின் சகல வகைகளையும் உ ச்சிமேல் வைத்து மெச்சு " என்று சோவியத் மகா கவியாகிய மாயகோவஸ்கி பாடு கிறானே இந்த வாழ்வின் வீறை, விறலை கம்பன் காவிய முழுவதி லும் முழுவடிவத்தில் காணலாம். வாழ்வைக் கட்டிக் காக்கும் மானிடப் பெரும்படையின் அணி வகுப்பில் ஒவ்வொரு மனிதனையும் போர்வீரனாக்கி நிறுத்துவதி லும், பிரபஞ்ச முழுவதையும் கம்பீர நடைபோட்டுச் சுற்றி வர நாடும் பேராவலை ஊட்டுவதிலும் உலக மகாகவிகளில் கம்பனுக் குக் கம்பனே நிகர் "குருதியிலே கரைந்த நெருப்பைப் போலக் காதல் தாகம் கவிதையை நிறைக்கவேண்டும் லட்சியமற்றக் கவிதை உயிரற்றது. அதன் வேகம் அணையும் நெருப்பை ஒத்தது. சிறந்த கலைஞன் இயற்கையைப் பயன்படுத்தித் தன்லட்சியத்தை வெளியிடுகிறான்; அவன் புது உலகை சிருஷ்டிக்கிறான் நமக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறான்" என்று மகா கவியான மகமத் இக்பால் கூறுகிறான்.