பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

________________

19 ஆழ்ந்த தத்துவ ஞானியாக இல்லாத எவனும் இதுவரை ஒரு மகா கவியாக இருந்ததில்லை" என்று கோலரிட்ஜ் என்ற விமர்சகப் பேராசிரியன் கூறுகிறான். "நமக்கு நன்னம்பிக்கை யூட்டி லட்சிய உறுதியோடு வாழ்க் கையின் கடிய, கொடிய சோதனைகளை அசையாத ஆண்மையோடு சகிக்கப் பண்படுத்தும் கலை எதுவோ அதுவே சிறந்த கலை" எனன தனது கால அரபிக் கவிதைகளைப்பற்றி நபிகள் நாயகம் கூறுகிறார். 46 33 அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்ற மகத்தான மானிட லட்சியத்தை மலைபோல் முன்னிறுத்தி பாவின் சுவைக் கடல் உண்டெழுந்து தீம்பாற்கடலைப் பொழிகிறான் கம்பன். கம்ப காவியத்தில் திளைத்த பாரதி "கம்பன் என்று ஒரு மானிடன் வாழ்ந்ததும்" என்று பாடுகிறான். இனி மானிட சித்திரங்களாகிய கம்ப சித்திரம் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன். உடற் பண்பிலும் உள்ளப் பண்பிலும் நிறைகுடமாக விளங் கும் இராமலட்சுமணரை, ஒரு மலையின் முகட்டில் கம்பன் கொண்டு வந்து நிறுத்துகிறான். மானுடம் வென்றது இராமனைப் பற்றியும் இலக்குமனைப் பற்றியும் அனுமன் வாயி லாகச் செவியாரக் கேட்ட சுக்ரீவன், அவர்களைக் கண்டு களிக்க வருகிறான். வருகிற வழியில், ஒரு திருப்பம் திரும்பியதும் இராம லட்சுமணர்களின் உருவங்களைத் திடீரென்று காண்கிறான். இயற் கையின் படைப்பில் இப்படியும் அற்புதம் நிகழுமா என்று மூக்கில் விரலை வைத்துக்கொண்டு ஒரே அதிசயத்தில் மூழ்கி விடுகிறான். பின்னர், 'ஆஹா ! சரி, சரி' என்று ஒரு முடிவுக்கு வருகிறான். 'தேவர்களுக் க்கெல்லாம் மேலான தேவர்கள் தங்கள் பிறப்பை மாற்றிக்கொண்டு, மனிதப் பிறப்பெடுத்து, இங்கு வந்திருக்கிறார். கள். இதில் துளியும் ஐயம் இல்லை!' என்று வீரனான சுக்ரீவன் ஆனந்த பரவசமடைகிறான். அப்பால், சிவபெருமானையும், பிரம் மனையும் மற்றுமுள்ள கடவுளர்களையும் மானிடம் - மானிட வாழ்வு