பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

________________

20 வென்றுவிட்டது, நிச்சயமாகவும் வென்றுவிட்டது என்று வாய் விட்டுக் கூறுகிறான். கம்பன் பாட்டைக் கேளுங்கள்: தேறினன்; அமரர்க் கெல்லாம் தேவராம் தேவர் தாமே மாறிஇப் பிறப்பில் வந்தார் மானுட ராக மன்னே! ஆறுகொள் சடிலத் தானும் அயனும் என்றிவர்க ளாதி வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்ற தம்மா! எ கம்பன் தனது காவியத்தின் நடுநாயகப் பாத்திரமான இராம னில் மானிடத்தின் கொடுமுடியைக் காட்டுகிறான். காட்டி, மானி உப் பிறப்பு வேறுள பிறப்பை எல்லாம் வென்றுவிட்டது என்று கூறி மனித மாண்பை விண் முட்டத் தூக்கிப் பிடிக்கிறான். இந்தக் கம்ப சித்திரத்தைக் காண்கிற நாம், புது உலகக் கலைஞனான மாக்ஸிம் கார்க்கி சொன்னதுபோல், "மனிதன்! எத்துணை மகா மந்திரச் சொல்" என்று வியக்க நேருகிறது. பின்னால் சுக்ரீவன் கண்டு, $2 வேறுள குழுவை யெல்லாம் மானிடம் வென்ற தம்மா என்று இறும்பூதெய்தும்படிச் செய்த இராமன், முன்னால் மாமுனிவனான வசிட்டன் பார்வையில் எவ் வாறு படுகிறான் என்பதை கம்பன் சொல்லக் கேளுங்கள். தசரதன் ஆட்சி பீடத்தைத் துறக்க நினைக்கிறான். வசிட்டன் முதலான அமைச்சர்களை சபைக்கு வரச்செய்கிறான். அவர்களைப் பார்த்து, "நாட்டையும் மக்களையும் இராமன் செவ்வையாகப் பாதுகாக்கும் திறமுடையவன் தானா? உங்கள் கருத்து என்ன?' என்று கேட்கிறான். அதற்கு வசிட்டன் பின்வருமாறு பதிலிறுக் கிறான்: "தரும தேவதையே இராமனாக அவதரித்திருக்கிறது என்று சொல்வதைவிட வேறு என்ன சொல்லக் கிடக்கிறது? பிரம்மனும், திருமாலும், சிவபெருமானும்--படைப்பு, பாதுகாப்பு, அழிப்பு