பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

________________

21 என்ற மூன்று தத்துவங்களாக நின்று உலகத்தை அழகாக அமைத்து வைத்திருக்கின்றனர். ஆயினும், இயற்கையின் திருத் தத்தையும் திருத்தவல்ல பேரறிவும் பேராற்றலும் வாய்ந்த மனித னும் பிறக்கிறான். அத்தகைய மனிதன்தான் இராமன் ” இனி பாட்டைப் படியுங்கள்! புறத்து நாம்ஒரு பொருள்இனிப் புகலுவ தெவனே ? அறத்தின் மூர்த்திவந் தவரித் தான்என்ப தல்லால், பிறத்து, யாவையும் காத்தவை பின்னுறத் துடைக்கும் திறத்து மூவரும் திருத்திய திருத்தும் அத் திறலோன். மும்மூர்த்திகளின் படைப்புகளையும் திருத்தி அமைக்கத் தக்க சக்தி - மகாசக்தி, மனிதனிடம் பொதிந்து கிடக்கிறது என்ற கம் வனின் குறிப்பு உன்னி உன்னி ஓரத்தக்கது. கம்பன் தனது மானிடத்தின் இரண்டு ஈரற்பைகளாக அறத் தையும் அன்பையும் கொள்கிறான். ஆகவே கம்பனின் இராமன் அறத்தின் மூர்த்தியாய் விளங்குவதுபோல அன்பின் மூர்த்தியாக வும் காட்சி அளிக்கிறான். தண்டகாருண்யத்து முனிவர்கள் இராமனை அடைக்கலம் புகு கிறார்கள். அரக்கர்களின் இரக்கமற்ற தொல்லைகளி லிருந்து தங் களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று இராமனிடம் கனித்து வேண்டுகின்றனர். இராமன் அஞ்சேல் என்று அபயம் அளிக் கின்றான். அப்பொழுது அவன் அவர்களிடம் ஒரு உண்மையைக் கூறுகின்றான். என்ன கூறுகின்றான்? தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவனே மனிதனில் மாண்புடையவன். ஆவுக்காகவோ, அந்தணர்க்காகவோ, எளி யவர்க்காகவோ, யாருக்காகவோ, ஒருவன் பிறர்நல - பொது நல நாட்டத்தோடு, உயிரைத் தியாகம் செய்வதில் வெற்றி பெறுவா