பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

________________

22 னாயின் அவன் தேவாதி தேவர்களாலும் கையெடுத்துக் கும்பிடும் தகுதியுடையவனாகி விடுகிறான். ஆவுக் காயினும் அந்தணர்க் காயினும் யாவர்க் கேனும் எளியவர்க் காயினும் சாவப் பெற்றவரே தகை வானுறை தேவர்க் கும்தொழு தேவர்க ளாகுவர். (அகத்தியப் படலம்-21 மேலும் அதே முனிவர்கனிடம் 'அஞ்சவேண்டா' மென்று தேறுதல் கூறும்பொழுது, இராமன் வாயிலாக கம்பன் 'அறம் வெல்லும்' என்ற சர்வநிச்சயத் தன்மையைக் கூறும் பாணியைப் பாருங்கள்! சூரசங்காரனான சுப்ரமணியக் கடவுளும், சங்கு சக்கர தாரியான மகா விஷ்ணுவும், திரிபுரம் எரித்த சிவபெருமானும் அரக்கர்களுக்குத் துணைபோவாராயின், நான் அவர்களையும் வேர றுப்பேன் என்று உறுதி கூறுகிறான் இராமன். இதன் பொருள், பாவத்திற்குத் துணைபோயின், மும்மூர்த்திகள்கூட அழிவர் என்று கூறி, மனித தருமத்தின் சர்வ வல்லமையை தூக்கி வைத்துப் புகழுகிறான் கம்பன். சூரறுத்தவனும்சுடர் நேமியும் ஊரருத்த ஒருவனும் ஓம்பினும் ஆரறத்தி னெடன்றி நின்றர் அவர் வேரறுப்பென் வெருவன்மின் என்றான். (- அகத்யர் படலம்-22) அழியினும் அடைக்கலம் தேடுவர் விபீஷணன் இராமனிடம் அடைக்கலம் புக வருகிறான். வந்த விபீஷணனை ஏற்றுக்கொள்ளலாமா கூடாதா? என்று இராமன், மந்திராலோசனை சபை கூட்டி தனது தளபதிகளிடம் கேட்கி றான். வானரர்களெல்லாம் எக்காரணத்தைக் கொண்டும் விபீ ஷணனை நம்மோடு சேர்த்துக்கொள்ளக் கூடாதென்கிறார்கள். சுக்ரீவனும் விபீஷணனை ஏற்றுக்கொள்ளும் யோசனையை அழுத் தந் திருத்தமாக மறுக்கிறான். தம்பி இலக்குவனும்கூட உக்ரமாக