பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

________________

23 எதிர்க்கிறான். அந்தச் சபையில் அனுமன் மட்டுமே விபீஷணனை ஏற்றுக்கொள்வது சரி என்று யோசனை சொல்கிறான். ஆனால் அவனுடைய யோசனை அந்த சபையில் பலவீனமாகவே கேட் கிறது. சில வானர வீரர்கள், விபீஷணன் உளவு தெரிய வந்தி ருப்பான்; அவனை உடனே கொன்றுவிட வேண்டும் என்றுகூட யோசனை சொல்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் இராமன் மனிதத் தன்மையின் உன்ன தமான உணர்ச்சியை வெளியிடுகிறான். கம்பனுடைய இரா மன் கூறுகிறான் : அடைக்கலம் என்று வருகிறவன், நமக்கு முன்பின் தெரியாது இன்று புதிதாக வருகிறவனாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எனது பரம விரோதியான இராவணனே அடைக்கலமாக வந்தால் அவனையும் ஏற்றுக்கொள் ளத்தான் வேண்டும். வந்து நம்மோடு சேர்ந்த பிறகு, நமக்குத் துரோகம் செய்கிறான், நமது உயிர்க்கு உலைவைக்கிறான் என்றிருக் கட்டும். அப்பொழுதும் நமக்கு நஷ்டமில்லை. புகழே பெருகும். இதோ கம்பன் பாட்டு! இன்று வந்தான் என்றுண்டோ? எந்தையை யாயை முன்னைக் கொன்று வந்தான் என்றுண்டோ? புகலது கூறு கின்றான். தொன்றுவந் தன்பு பேணும் துணைவனும் அவனே! பின்னைப் பின்றும் என்றாலும் நம்பால் புகழன்றிப் பிறிது முண்டோ? நீதியிலெல்லாம் நீதி இந்த மனித நீதிதான் என்று இராமன் மூலம் நமக்கு விளக்குகிறான் கம்பன். மற்றொரு கம்ப சித்திரத்தில், 'மானிடம்' சிறந்த முறையில் இராமன் வாயிலாக வெளிப்படுவதைப் பாருங்கள்! தம்மவர் குற்றத்தைத் துடைத்தான் தசரதன் கைகேயிக்கு இரண்டு வரம் கொடுத்திருந்தான். அதனால் கைகேயி தருணம் வாய்த்ததும், ஒரு வரம், பரதன்