பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

________________

24 நாடாளவும், ஒரு வரம், இராமன் காடாளவும் பெற்றாள். இராமன் காட்டுக்குச் சென்றான். பரதனுக்கு ஒன்றும் தெரியாது, இது பற்றி. பிரிவாற்றாமையால் கோபங் கொண்ட தசரதன், தான் வரங்கொடுத்ததை நோவாமல், கைகேயியை நொந்தான். கோபத் தால் சபித்தான். இனி நீ எனக்கு மனைவி அல்ல, உன் மகன் பரதன் எனக்கு மகன் அல்லன்' என்றான். பின்னர் இறந்தான். காட்டிலிருந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் இராமன் நாட்டிற்கு மீண்டான். இராமனிடம் தேவதூதர்கள் தசரதனை அழைத்து வந்தார்கள். தசரதன் இராமனைக் கண்டதும் அர வணைத்துக்கொண்டு, உனக்கு ஒரு வரம் கேள் ' என்றான். தசரதன் தனது தவற்றை மறந்து, கைகேயியை மனைவியல்ல. ளென்றும், பரதனை மைந்தனல்லனென்றும் சபித்த குற்றத்தைத் துடைக்கக் கருதி இராமன், கைகேயியும் பரதனும் எனக்கு அன்னையும் தம்பியும் ஆகும் வரம் தா என்று கேட்டான். லகத்து உயிர்களெல்லாம் இராமனை வா வாழ்த்தின. 26 இனிக் கம்பன் கவியைப் பாருங்கள் ! ஆயினும் உனக்கமைந்த தொன்று உறையென அழகன், தீயள் என்றுநீ துறந்தஎன் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம்வரம் தருகெனத் தாழ்ந்தான். வாய்திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி. தன்னைச் சேர்ந்தாரின் குற்றத்தைத் துடைப்பது, மனிதத் தன்மையின் எத்தனை சிறந்த கடமை உணர்ச்சி என்பதை உலகம் அறியும்படி இராமன் மூலமாகக் காட்டுகிறான் கம்பன். கைகேயியும் பரதனும், தனது தாயும் தம்பியும் ஆகும்படி வரங் கேட்டு, இராமன் தசரதன் முன் தலை வணங்கியதும் என்ன நடந்ததென்று கம்பன் படம் பிடித்துக் காட்டுகிறான் பாருங்கள்! சகல ஜீவராசிகளும் எழுந்து நின்று, வாய் திறந்து, மிக ஆர்ப்