பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

________________

25 பாட்டத்துடன் 'இராமன் வாழ்க, வாழ்க' என்று கோஷித்தன என்கிறான் கம்பன். கம்பன் இராமனில் ஏற்றிக்காட்டும் மானிடம் தான் என்னே ! இன்று போய்ப் போர்க்கு நாளை வா! இறுதியாக ஒரு சித்திரம்: முதல்நாள், இராமனுக்கும் இராவணனுக்கும் கடும் போர். ரத, கஜ, துரக, பதாதிகளோடு இராவணன் போராடினான். அத் தனையும் துவம்சம் செய்தான் இராமன். இராவணன் தன் தேரில் நின்று மட்டும் போராடினான். அவன் தேரை ஒழித்துக்கட்டினான் இராமன். இராவணன் தரையில் நின்று போராடினான். அவன் கை வில்லையும் முறித்தெறிந்தான் இராமன். இராவணன் வெறுங் கையோடு நின்றான். பேராண்மையின் திருவுருவாகிய இராமன், தனது பரமவைரி யான இராவணனைப் பார்த்து, "இன்று போய்ப் போர்க்கு நாளை தயாரிப்போடு வா என்று பெருந் தகைமை கனிய வழி அனுப்பு கிறான். கம்பன் தரும் இந்த நிகரற்ற நாடகக் காட்சியை அனுபவி யுங்கள் ! ஆளையா! உனக்கமைந்தன மாருதம் அறைந்த பூனையாயின கண்டனை ; இன்றுபோய்ப் போர்க்கு நாளைவாவென நல்கினன் ; நாகிளங் கமுகின் வாளைதாவுறு கோசலைநா டுடைவள்ளல். 99 (முதற் போர் படலம் 256) 68 'நாளைவா' என்று சொல்லுமுன் இராமன், இராவணனிடம், "வலியெலாம் கொண்டுநில் என்பதும், 'நேர்நின்று பொன் றுதி யெனினும் நல்லை " என்பதும், " பிழைப்பினி உண்டென நய வேல்" என்பதும் தருமத்தின் சர்வநிச்சய வெற்றி எவ்வாறு பேசும் என்பதைக் காட்டுகிறது.