பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

________________

4 26 நாளை வா' என்று சொல்லாமல் விடப்படுகிறானே ராவ ணன், அவன் யார் ? எத்தகையன்? 16 முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும்...... ' உடையவன் இராவணன். "தேவருக்கும் திசைக்கரிக்கும் சிவனார்க்கும் இராவணன். மயனுார்க்கும் செங்கண்மாற்கும் ஏவருக்கும் வலியான் ” "என்னையே நோக்கி யான்இந் நெடும்பகை தேடிக் கொண்டேன் ” என்று கொக்கரித்த தன்னகங்காரத்தின் தனிப்பெரும் சிகரம் இராவணன். இத்தகைய இராவணனை ' இன்று போய் நாளை வா சொல்கிறான் மகா மானிடனாகிய இராமன். என்று ஹிட்லர் ஆயுதங்களிழந்து தனியாக வந்து, அகப்பட்டுக் கொண்டான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பார்த்து, ஹிட்லர் ஐய, இன்றுபோய் நாளை வாருங்கள்" என்று சொல் வார்களா? அப்படிச் சொன்னால், அதைக்கேட்டுச் சிரிக்கமாட் டார்களா? ஹிட்லர் இப்படி முற்றமுற்ற வலுக்குன்றி நின்றால் அப்பொழுதே, அங்கேயே அன்னே அவனை எமலோகம் அனுப்பி விட்டுத்தானே மறுகாரியம் பார்ப்பார்கள்? அதைத்தானே மிகச் சிறந்த போர்த் தந்திரம் என்று கூறுவார்கள்? கம்பன் காவியத்தில் இராமன், யாராலும் வெல்ல முடியாத, வரம்பெற்ற 'இராவணேஸ்வரனை', மறத்தின் மகாமேருவை