பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2::

அவ்வாறு நதிக்கரைக்குச் சென்ற போது, வால்மீகி, ஆணும் பெண்ணுமாய் விளையாடிக் கொண்டிருந்த கிராஞ்சப் பட்சிகளில் ஒன்று ஒரு வேடனது அம்பால் அடிப்பட்டுக் கீழே விழ, அதைக்கண்டு அவ்வேடனுக்கு சாபமிட, அச்சாபத்தின் சந்தமே தனது காவியத்திற்குச் சந்தமாகச் செய்யுள் வடிவத்தைப் பெற்றது. அதுவே வால்மீகி ராமாயணம் என்று புண்ணிய நூலின் அற்புதத் தோற்றுவாய்" என்றும் இராஜாஜி அவர்கள் குறிப்பிடுகிறார்கள் மேலும், மக்களின் துக்கங்களை, ஈசுவரனும், ஈசுவரியும் மானிட ஜாதியில் பிறந்து தாமே நேரில் அனுபவித்து தருமத்தை உறுதிப்படுத்திவிட்டு மறைந்த இந்தப்புண்ணிய கதையை வால்மீகி மகிரிஷி ஒப்பந்த மதுரமான முறையில் பாடி உலகத்திற்குத் தந்தார். பூமியில் மலைகளும் ஆறுகளும் உள்ள வரையில் இந்த ராமாயணம் மக்களிடையே வழங்கும், எல்லாப் பாடங்களினின்றும் விடுதலை தரும்” என்று நான்முகம் ஆசீர்வதித்துச் சொன்னது பொய்யா காது என்றும் ராஜாஜி அவர்கள் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

இவ்வாறு நாராணனுடைய விளையாட்டையும் அவனுடைய அவதாரமான இராமபிரானுடைய கதையை நாரதர் சுருங்கச் சொல்ல, அதை விரித்துக் கம்பீர நாதத்துடன் வால்மீகி முனிவர் உலகம் போற்றும் உயிர்த் துடிப்பு மிக்க மகா காவியமாகப் பாடியுள்ளதை அறிகிறோம். இந்தக்கதையைத் தழுவியே கம்பன் தனது இராவதாரப்பெருங்கதையைப் பாடியதாக மேலே குறிப்பிட்ட தனிப்பாடல் குறிப்பிடுகிறது.

இனிக்கம்ப நாடார் தனது காவியத்தின் பாலிரத்தில் நூலின் வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுபோது,

"தேவபாடையில் இக்கதை செய்தவர்

மூவர் ஆனவர் தம்முளும் முந்திய

நாவினார் உரையின் படி நான் தமிழ்ப் பாவினார்

இது உணர்த்திய பண்பு "அரோ" என்று கூறுகிறார்.