பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3::

இப்பாடலின் விளக்கம் விரிவானது. தேவ பாஷையில் [வட மொழியில்] இக்கதை செய்தவர் மூவர். அவர்கள்,

வால்மீகி, வசிட்டர், வியாசர் ஆகிய மூவர் எனக்றுவர். வசிட்டர் பாடியது வசிட்டராமாயணம் வியாசர் செய்த 7-து அத்யாத்ம ராமாயணம் வியாசரை நீக்கி போதாயனரைச் சேர்த்து மூவர் என்றும் கூறுவார். உளர். போதாயனர் செய்தது போதாயனராமாயாணம். இவை சற்று அதிகமாக தத்துவஞானத்தன்மை கொண்டது.

"மூவர் ஆனவர் தம்முறும் முந்திய நாவினார் உரையின் படி" என்று கம்பர் குறிப்பிடும் போது, முந்திய நாவினார் என்றால் சிறந்த நாவன்மையுள்ள வான்மீகியார் என்று பொருள் ரூசூகூறுவார் உண்டு. இருப்பினும், இந்த மூவருக்கு முன்பும் பலரும் வாய் வழிச் செய்தியாக, நாட்டுப்புற வழக்காகப்பாடிய இராமாயணக்கதைபற்றிய பல பாடல்களும் கதைகளும் உண்டு என்றும் அவைகளை ஆதாரமாகக் கொண்டும் கம்பன் தனது மகா காவியத்தைப் பாடினார் என்றும் கொள்ளலாம். இராமாயணக் கதைப் போக்கிலும் பலதத்துவ விளக்கங்களிலும் இராமபிரானது அவதாரப் பெருமைகளையும் திருமால் பெருமைகளையும் விளக்கிக் கூறுவதிலும், வால்மீகி ராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் சிற்சில வேறுபாடுகள் காணப்படுவதைப் பல அறிஞர்களும் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

வால்மீகி ராமாயணம் மிகவும் புகழ் பெற்ற மூல நூலாகும். வால்மீகியை ஆதாரமாகக் கொண்டு தான் பாரதநாட்டின் இதர மொழிகளிலும் ராமாயணக் காவியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளில் கம்பராமாயணம் மிக உயர்ந்தும் சில இடங்களில் வால்மீகியை மிஞ்சியும், தனித்தன்மையுடன் விளங்குவதாக பல அறிஞர்களும் குறிப்பிட்டுக்றியுள்ளார்கள்.

புகழ்மிக்க. பிரபலமான, உலக அங்கீகாரம் பெற்றுள்ள இந்திய வரலாற்று நூலாசிரியர்களின் குறிப்பாக தென்னிந்திய வரலாற்றாசிரியர்களின் முதன் பெற்று முன் வரிசையில் உள்ள